பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. நண்பர்களுக்கு வரையும் கடிதங்களுக்கும் என் சொந்தப் பேனாவும் பயன்படுத்துவேன்” என்று கூறி என்பக்கம் திரும்பி "தாங்கள் வந்த செய்தி என்ன?’ என வினவினார். உடனே நம் அண்ணல், "நான் வந்த வேலை முடிந்து விட்டது. பொதுத் தொண்டு செய்வது எப்படி? - என்ற பாடத்தைத் தங்களிடம் இன்று கற்றுக் கொண்டேன்' என்று கூறி மகிழ்ச்சியுடன் விடை பெற்றுத் திரும்பினேன். இவை பொது வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்டன” என்கின்றார். 3. திதி கொடுத்தல்" குப்புசாமி சிற்றுார்வாசி. தம் தந்தைக்குத் திதி கொடுக்க நினைத்தார். ஒரு பார்ப்பனரை அணுகினார். அவர் தந்த பட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந்தார். ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார். குப்புசாமி, 'இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?" என்று ஐயரை வினவ, அவர், 'மேல் உலகத்திலுள்ள உம் தந்தைக்குமந்திரங்களை செபித்து-செபித்து அவருக்கு இவை எல்லாம் அனுப்பி வைக்கப் பெறும்." என்றார். குப்புசாமிக்குப் பெரிய மகிழ்ச்சி தந்தை இறந்த பிறகும் அவர் உண்ண உணவு தருகின்றோம் என்ற மகிழ்ச்சி சடங்குகள் தொடங்கின. சாமான்களை ஐயர் பார்வையிட்டபோது அங்கிருந்தது 'புழுங்கல் அரிசி'. 'இது வேண்டா; பச்சரிசி கொண்டு வாரும்: - என பகன்றார். - உடனே குப்புசாமி - "சாமி! எங்கப்பாவுக்குப் பச்சரிசி ஆகாது. அதை உண்டதனால்தான் வயிற்று வலி வந்து வானுலகம் சென்றார். மேலுலகத்திற்கு இதை அனுப்பி அங்கும் அவருக்கு வயிற்று வலி உண்டாக்கித் துன்புறுத்த வேண்டாவே' என்று வினயத்துடன் வேண்டிக் கொண்டார். ஐயருக்கு, அப்போது என்ன செய்வது? என்ன சொல்வது? என்று விளங்கவே இல்லை! 15. அதிவுக் கதைகள் - பக்.78