பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபவநாயகர் * 155 4. இல்லை Gust” 'அம்மா தாயே! பிச்சை போடுங்க” என்று பிச்சைக்காரன் ஒரு வீட்டின் முன்நின்று கூவினான். அந்த வீட்டு மருமகள் வெளியில் வந்து, ஒன்றுமில்லை, போ'என்று சொல்லி அனுப்பினாள். அவனும் முணுமுணுத்துக்கொண்டே ஏசத் தொடங்கினான். அவன் போய்க் கொண்டிருந்தபோது வெளியில் அலுவல் நிமித்தம் சென்றிருந்த மாமியார் திரும்பி வந்து கொண்டிருந்தாள்; பிச்சைக்காரனை வாப்பா என்று கூட்டிக் கொண்டு சென்றாள். அவனும் ஏதோ கிடைக்கும் என்று திரும்பி வந்தான். வாசற்படிவரை சென்றவள், 'ஏம்பா நேற்று வந்த அந்தச்சிறுக்கி சொன்னதும் நீபோய்விடுவதா? நான்தான்இந்த வீட்டு மாமியார் அவளுக்கு இல்லை' என்று சொல்ல என்ன அதிகாரம்? நான்தான் சொல்லவேண்டும் இப்போது சொல்லுகிறேன். “இல்லை தியோ’’ என்றாள் மாமியார்: "எம்மா! இதைச் சொல்லவா அழைத்தீர்கள்? நான் என்னமோ உங்களை நம்பி... போங்கம்மா!' என்று மனம் வெதும்பிச்சொல்லிக்கொண்டே ஏகினான். பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்லுகிற அதிகாரம் கூட மருமகளுக்கு இருக்கக்கூடாது என்று எண்ணும் மாமியார்களும் சிலர் உள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. 5. ஊர்வலம்" திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம். பூப்பல்லக்கு அலங்காரம்; "பட்டணப் பிரவேசம்' (ஊர்வலம்) நடைபெறுகின்றது. மதுரை பொன்னுசாமிப் பிள்ளை நாயனம். பைரவி இராகம். ஆலாபரணம் பண்ணிக் கொண்டிருக்கின்றார். எல்லோரும் அந்த இசையின்பத்தில் தோய்ந்து திளைக்கின்றனர். 15. அதிவுக் கதைகள் . பக்83 17. அதிவுக்கதைகள் -பக் 124