பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பயணப்படி குழுவின் கூட்டத்திற்கு வரும் ஒவ்வோர் உறுப்பினரும் தத்தம் ஊர்களிலிருந்து போக வர இரண்டாம் வகுப்பு இருப்பூர்திக் கட்டணப்படியும் ஒரு நாள் செலவுப் படியும் பெறுவதற்கு உரியவராவார். அண்மையில் இருப்பூர்தி முதல் வகுப்புக் கட்டணம் படியாக வழங்குவதாக முடிவு செய்யப்பெற்றது. தோக்கங்கள்: இப்புலவர் குழுவின் நோக்கங்களாவன: (1) தமிழ் மொழியின் உயர் தனிச் செம்மையையும் இனிமையையும் தொன்மையையும் பரவச்செய்தல்; (2) இக்குழுவைப் பழங்காலத் தமிழ்ச் சங்கங்கள் மூன்றினையும் தொடர்ந்ததாகவும், குழு உறுப்பினரை பழங்காலச் சங்கப் புலவர் நாற்பத்தொன்மர் வழித் தோன்றலாகவும் கருதுதல்; (3) சங்க கால நூல்களுள் இதுவரை அச்சேற்றி வெளி வராத சுவடிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை வெளியிட உதவுவதும், இதுவரை வெளிவந்த நூல்களில் தவறுகள் இருப்பின் அவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துதலும், எல்லாத் துறைகளிலும் தமிழை வளர்க்கவும், போற்றவும், அழிவுறாமல் தடுக்கவும் ஆவன செய்தல்; (4) தமிழ் மொழி வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ப் புலவர் வரலாறு, தமிழ் மன்னர் வரலாறு, தமிழ்ப்புரவலர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிடுதல்; (5) தமிழ் மொழியில் வெளி வரும் நூல்கள் சிறப்புடையனவாயிருப்பின் அவற்றிற்கு இக்குழு தற்சான்றுகளை வழங்குதல்; - (6) தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்க்க விரும்புகின்ற பிற நாட்டின்ருக்கும் நம் நாட்டினர்க்கும் தக்க வழிகாட்டுதல்; a. இவற்றில் பெரும்பாலானவற்தை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வேலியிட்டுள்ளது: தனியார்லேகும் வெளியிட்டுள்ளனர். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி வெளியிடச் செய்யலாம்.