பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழுகண்டபுரவலர் * 183 வழிப் புலவர் எழுவர், பண்டிதர் எழுவர், புலவர் கல்லூரிச் சார்பாளர் எழுவர் என்னும் துறைகள் ஏழுக்கும் எவ்வேழு பேர்களாக நாற்பத்தொன்பதின்மர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இங்ங்ணம் தேர்ந்தெடுக்கப் பெற்றதில் முதுமைக்கு முதலிடம் கொடுக்கப் பெற்றது; இஃதுடன் ஒத்த உரிமையும் வழங்கப் பெற்றது. இக்குழு உறுப்பினர்களின் தொகை என்றும் நாற்பத்தொன்பதாகவே இருந்து வரும். உறுப்பினர்.ஒவ்வொருவரும் தம்வாழ்நாள்முழுவதுமே இக்குழுவில் உறுப்பினராக இருந்து வருவர். ஆனால் தமிழ்க் கல்லூரியின் சார்பாளர்கள் எழுவரும் அக்கல்லூரிகளில் பணியாற்றும் வரை மட்டுமே குழுவின் உறுப்பினராக இருப்பர். பிறகு வேறொரு புலவரை அக்கல்லூரி தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும். செயற்குழு. இக்குழுவை ஆட்சி செய்ய ஏழு உறுப்பினர்களைக் கொண்டஒரு செயற்குழு இருக்கும். மூன்று ஆண்டுகட்கு ஒரு முறை செயற்குழுவினர் தேர்ந்தெடுக்கப் பெறுவர். இக்குழு ஆண்டுக்கு இருமுறை கூடும். இக்குழுவின் நடைமுறைக் கணக்காண்டு தைத்திங்கள் முதல் மார்கழி ஈறாக உள்ள திருவள்ளுவர் தொடர் ஆண்டாக இருக்கும். இக்குழுவின் முதல் மூன்று கூட்டங்களுக்குப் பேராசிரியர் டாக்டர் சோம சுந்தர பாரதியார் தலைவராக இருப்பார் என்றும், அடுத்து வரும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் சுழல் முறைப்படி ஒவ்வொரு புலவர் தலைமை தாங்குவார் என்றும், தலைமை தாங்குவதற்குரிய முறை அவரவர் பிறந்த நாள் அடிப்படையில் முதுமை முறைப்படிஅமையும் என்றும், எந்த ஒரு கூட்டத்திற்காவது சுழல் முறைப்படி தலைமைதாங்க வேண்டியவர் வராதிருப்பாரானால் குழுவினால் தேர்ந்தெடுக்கப் பெறும் ஒருவர்.அக்கூட்டத்திற்குத்தலைவராக இருப்பார் என்றும் ஒரு மரபு முறை ஏற்படுத்தப் பெற்றுள்ளது.