பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. இல்லை என்பதை உணர்ந்தார். இத்தகு முதன்மையான காரணம் தமிழ் மக்கள் தமிழறிஞர்களைப் போற்றாது விட்டமையே யாகும் என்பதையும் தெளிந்தார். அமைப்பு தேவை: புலவர் பெருமக்களுக்கும் பொது மக்களுக்கும் இருந்த தொடர்பு பல்லாண்டுகளுக்கு முன்பே அற்றுப் போயிற்று. புலவர் பெருமக்களைக் குறித்துப் பொது மக்களும், பொதுமக்களைக் குறித்துப் புலவர் பெருமக்களும் கவலைப்படாவிடில் நாடும் மொழியும் என்னாகும்? என்று சிந்தித்தார் நம் அண்ணல். இந்த இழி நிலை மாற வேண்டும் என்ற எண்ணம் இவர்தம் தமிழ் உள்ளத்தில் முகிழ்த்தது. இதற்கு முன்னர் தமிழர் கழகம்’ என்ற ஒர் அமைப்பை கண்டு வளர்த்த அநுபவம் இதற்குக் கை கொடுத்து உதவியது. இதற்காகப் புலவர் பெருமக்களை ஒன்று திரட்டி அவர்களைக் கொண்டு நாட்டுக்கும் மொழிக்கும் நல்வழி காட்ட வேண்டும் என்ற சிந்தனையும் எழுந்தது. இதற்கு ஒர் அமைப்பு இன்றியமையாதது என்று முயற்சி செய்தார். மணிவிழா: இந்நிலையில் இவர்தம் மணி விழாவந்தது. திருச்சி தேவர்மன்றத்தில் 11-11-1958இல் இது நட்ைபெற்றது. இந்த விழாவில் தம் கருத்தை அண்ணல் தமிழ்கூறு நல்லுலகிற்கு அறிவித்தார். அதன் விளைவாகத் தோன்றியதே 'தமிழகப் புலவர் குழு’. உறுப்பினர் தகுதி: இந்தக் குழு அமைப்புக்காக ஒரு தொடக்கக்கூட்டம் மதுரைபசுமலையில் டாக்டர் ச.சோமசுந்தர பாரதியார் இல்லத்தில் அவர் தலைமையில் நடைபெற்றது. புலவர் பெருமக்கள் பலர் அக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்தனர். கடைச் சங்கப் புலவர்களின் தொகையாகிய 49 என்ற தொகையே தமிழ்ப் புலவர் குழுவிற்கும் இருத்தல் வேண்டும் என்ற முடிவு செய்யப் பெற்றது. இதில் டாக்டர் எழுவர், பல்கலைஞர் எழுவர். தமிழ் முது கலைஞர் (எம்.எ) எழுவர், வித்துவான்கள் எழுவர், மரபு 2. திருக்கி மேல்சன் சாலையில் உன்னது.