பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகப் புலவர் குழு' கண்ட புரவலர் வள்ளுவர் வழிநின்று வாழ்க்கை நடத்தும் நம்அண்ணல் கி.ஆ.பெ.வி அவர்கள் தமிழ் வளம் பெற வேண்டும். தமிழர் வாழ்வு பெற வேண்டும், தமிழகம் வான் புகழ் பெற வேண்டும் என்ற மூன்றையும் சேர்ந்து ஒருங்கே கருதும் உள்ளம் படைத்த ஒரு சிலரில் தலையாயவர். இப்பெருமகனார் இம்மூன்றினை யும் ஒருங்கே விழைந்து, விழைந்தவாறே நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ளவர்தம் உள்ளங்களிலெல்லாம் எடுத்துரைத்து ஓயாமல் தொண்டாற்றி வருபவர். இவற்றிற்கு மேலாக, ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் (131) என்ற குறள் காட்டும் ஒளியில் நடப்பவர் ஒழுக்கத்தை உயிரை விடச் சிறந்ததாகக் கருதி அதனைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர். இத்தகைய பெருமகனார் சிந்தையில், சிந்தனையில் - பல்லாண்டுக் காலமாக ஒரு கருத்து புழுங்கிக் கொண்டே இருந்தது. 'தமிழ் மொழி, தமிழ் கலை, தமிழ் இசை, தமிழ் மருத்துவம், தமிழகம் ஆகியஐந்தும் உலகில் உயர்ந்த இடத்தில் இருந்து விளங்குதல் வேண்டும்” என்பது. அந்திலை இன்று இல்லை; அதனால் தமிழ் மக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 1.The Academy of famil Scholars of Tamil Nadu.