பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் கேண்மை : 45 முதலியார் அவர்களும் நாட்டார் ஐயா அவர்கள் பேசும் கூட்டத்திற்கு வருவதில் தவறுவதில்லை. திரு கி.ஆ.பெ.வி. யின் சந்தனச் செம்மேனி இனிய புன்முறுவல் தவளும் முகம், நன்கு வாரிய கிராப்புத் தலை, வெண்மை ஆடை முதலியவை அமைந்த கம்பீரமான தோற்றம் என்னைக் கவர்ந்தது. நானே என்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன். அன்றிலிருந்து அவர் எனக்கு ஒரு குறிக்கோள் மனிதராக ஆகிவிட்டார். என் கற்பனையிலிருந்த செகப்பிரியரின் நாடக மாந்தன், இவருடன் ஐக்கியமாகி விட்டான். பின்னர் இவரைச் சைவ சித்தாந்தச்சபையில் சந்திப்பதுண்டு. நினைவு - 2 1939-இல் என் கல்லூரிப் படிப்பு பி.எஸ்சி பட்டத்துடன் நிறைவு பெற்றது. 1940-41இல் சென்னை சைதாப் பேட்டை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து ஒராண்டு பயின்று எல்.டி. பட்டமும் பெற்றேன். துறையூரில் புதியதாகத் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமை யாசிரியர் பணி ஏற்றேன். புதிய பள்ளியாதலால் தலைக்கு மீறிய வேலை. சில சமயம் அண்ணல் தம்பம்பட்டிக்குப் புகையிலை வாணிக நிமித்தம் வருங்கால் அங்குள்ள ரெட்டியார்கள் பலர் என் உறவினர்களாதலால் அவர்களுடன் இவரைக் கண்டு மகிழ்ந்ததுண்டு. இதனைத் தவிர இந்த ஒன்பதாண்டுகளில் அண்ணலிடம் யாதொரு தொடர்பும் இல்லை. நினைவு - 3: 1950. ஜூலை முதல்துறையூர் தலைமையா சிரியர் பணியைத் துறந்து, அழைப்பின்பேரில், புதிதாகத் திறக்கப் பெற்ற காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் பதவி ஏற்றேன். இங்குக் கடுமையான உழைப்பு. பொது மக்களிடம் அதிகத் தொடர்பு இல்லை-சில பள்ளிகளின் ஆண்டு விழா போன்ற சிலவற்றில் பங்கு கொள்வதைத் தவிர. பத்தாண்டுக் காலம் இங்குப் பணியாற்றிய போது இரண்டு முறை காரைக்குடிக்குச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அமைந்துள்ள இரண்டு பள்ளிகளின் ஆண்டு