பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மூத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. விழாக்களில் அண்ணலும் அடியேனும் சேர்ந்து பேசியதாக நினைவு. தமிழில் பயிற்று முறைகள் பற்றிய நூல்கள் கல்லூரி மட்டத்தில் ஒன்றுமே இல்லை. நூற்றுக்கணக்கானதாய்மொழி பயிற்றும் முறைகளை துவலும் ஆங்கில நூல்கள், கவிதை பயிற்றும் முறைகளை நவிலும் ஆங்கில நூல்கள், அறிவியல் பயிற்றும் முறைகளை விளக்கும் ஆங்கில நூல்கள், கல்வி உளவியல் நூல்கள் ஆகியவற்றில் மிகவும் ஆழங்கால் பட்டு தமீழ் பயித்தும் முறை, கவிதை பயிற்றும் முறை, அறிவியல் பயிற்ஜம்முறை: கல்வி உளவியல், கவிதை அதுபவம் (திறனாய்வு) ஆகிய ஐந்து பெரிய நூல்களை எழுதி புதிய முறையில் திரந்தரமாக நிலையாக - இருக்கும் நூல்களை எழுதி வெளி விடும் பணியில் மிகவும் அதிகமாக ஈடுபாடுகொண்டிருந்தேன். நினைவு - 4: 1960- ஆகஸ்டு முதல் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்றேன். இங்கு ஒரு முறை தமிழகப் புலவர் குழுவைப் பல்கலைக்கழகத்தில் வரவேற்றுச் சிறப்பிக்கும் வாய்ப்பு வந்தது (1965). அதனை ஏற்றுச் செய்ய முடியவில்லை. குடும்பம் காரைக்குடியிலும் நான் திருப்பதியிலும் இருந்த துன்ப நிலை (6 ஆண்டுகள்). செப்டம்பர் 12 நாள் விடுமுறை; நடுவில் புலவர் குழு வருகை. வகுப்பு இல்லாதபொழுது பெரும்பாலும் நூலகத்தில் இருப்பேன். ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் குவியலாகக் கிடந்தன. நூலகர் ஒருவர் துணை கொண்டு வகைப்படுத்தி எண்ணிட்டுப் பிரிவினை செய்யும் பணியில் இருந்தேன். அண்ணல் என்.அறைக்கு வந்து முகவரிஅட்டையை என் மேசையின்மேல் விட்டுச் சென்றார். தங்குமிடம் பற்றிய குறிப்பு இருப்பின் நேரில் சென்று அவரைப் பார்த்திருப்பேன். எனினும், தெலுங்குப் பேராசிரியர் டாக்டர் சென்னாரெட்டி யிடம் புலவர் குழுவை வரவேற்கும் பொறுப்பை ஏற்று