பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் கேண்டிை * 17 நடத்துமாறு ஏற்பாடு செய்து விட்டுக் காரைக்குடி சென்று விட்டேன். திருப்பதியில் தமிழ்த்துறைக்காகக் கடுமையாக உழைக்க வேண்டிய நிலையை நானாக ஏற்படுத்திக் கொண்டேன். மானியம் பெறுவதற்காக சுமார் பத்து ஆண்டுகள் சென்னைத் தலைமை செயலகத்துக்குக் காவடி எடுத்தல், அறிவியல் நூல்கள் எழுதுதல், டாக்டர் பட்டத்திற்கு ஆய்தல் ஆகிய செயல்கள் போன்ற அலுவல்களில் மூழ்கி விட்டேன். என் கவனமும் தத்துவ நோக்கில் செல்வதாயிற்று. நினைவு - 5: திருப்பதியில் ஒய்வு பெற்று 1978 சனவரி முதல் சென்னை வாசம். முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் வளர்ச்சி கழகத்தில் தமிழ்க் கலைக் களஞ்சியப் பதிப்பாசிரியர் பணி; அதிலிருந்தும் ஓய்வு. 1982 முதல் அரசு ஏற்பாடு செய்த உயர்மட்டக் குழுக்களில் அடியேனும் அண்ணலும் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் அமைந்தன. எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கூட்டங்கள் பெரும்பாலும் எழும்பூர் இருப்பூர்தி நிலையத்தருகிலுள்ள ஒரு கட்டடத்தில் நடைபெறும். கூட்டம் முற்பகல் காலையில் தொடங்கி மதியம் முடிந்து விடும். அண்ணலிடம் உரையாடிக் கொண்டு இருப்பூர்தி நிலையத்திற்கு வருவேன். ஒரு தயிர் அமுதுப் பொட்டலம் வாங்கி வருமாறு பணிப்பார்; வாங்கி வருவேன். அதற்கு மேல் உண்பதில்லை. பயணச் சீட்டு வாங்கி வண்டியில் ஏற்றி விட்டு தான் திரும்புவேன். அண்ணலிடம் பழகுவதில் ஒரு தனி இன்பம். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நெருங்கிப் பழகினேன். இன்னும் நாலாண்டுகளில் அவர் காலத்திலேயே நூற்றாண்டு விழா அரசு எடுக்கும் என்றும், அதில் அடியேன் கலந்துகொண்டு உரையாற்றுவேன் என்றும் கூறுவேன். என்னைக் கூர்ந்து உற்ற நோக்கி மகிழ்வார். அதன் பிறகு நடைபெற்ற இரண்டு. மூன்று கூட்டங்களில் அண்ணல் 1. கூட்டத்தில் ஒரு சில புலவர் குழு உறுப்பினர்கள் திருப்பதி தமிழ் நாட்டைக் கேந்தது எனப் பேசியது கசப்பைவிளைவித்துவிட்டது. .ே2.