பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பெறச் செய்தும், தம்மிடமிருந்த ஏறத்தாழ 1500 நூல்களைஐந்து நூல் நிலைகளோடு புலவர் குழுவிற்காக முத்தமிழ்க் காவலர் நன்கொடையாகவும் அளித்து விட்டார். இதனால் புலவர் குழுவின் நூலகத்திற்கு “கி.ஆ.பெ. விகவநாதம் காலகம்' என்று பெயர் சூட்டுவதெனத் தீர்மானித்தது. (3) நல்ல அடிப்படையில் அண்ணல் அமைத்த புலவர் குழுவிற்கு நல்ல அமைதியான எதிர்காலம் உண்டு. மேலும் அணிாைல் அபெர்களி, (அ) தமிழகப் புலவர்குழுவின் சொத்துப் பொறுப்பாண்மைக் குழு (12 பேர் அடங்கியது) ஒன்றும், (ஆ) தமிழகப் புலவர் குழு செயற்குழு (10 பேர் அடங்கியது) ஒன்றும் நிறுப்பெற்று நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றது. நம் அண்ணல் அவர்கள் கிட்டத்தட்டப் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தலைவராகவும் பலவற்றின் செயலாளராகவும் பல்லாண்டுக் காலம் பணி புரிந்த பட்டறிவு இதற்குக் கை கொடுத்து உதவியுள்ளது என்று கொள்வதில் தவறில்லை.