பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை இன்றைய பேச்சு பத்துப் பகுதிகளாக அமைந்தது. கி.பி. 1899இல் தோன்றி பள்ளியோ கல்லூரியோ புகாமல் தமிழ் கற்று தமிழக வானில் ஒரு துருவ மீன்போல் திகழ்ந்த தமிழ் கூறு இந்தியா, மலேசியா, பர்மா முதலிய நாடெங்கும் கால் நடையாடி தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் பரப்பி, நிலையாக நின்று தமிழ்ப் பணியாற்றத் தமிழகப் புலவர் குழு கண்டு, 96 ஆண்டுகள் நாடெல்லாம் புகழ நல்வாழ்வு வாழ்ந்து, 1994இல் தமிழன்னையின் திருவடி நிழலிலும் தமிழர்களின் நெஞ்சில் நிலையாகவும் தம் புகழுடம்பை நிறுத்தி தம்புகழ் நிறுவி தாமாய்ந்த பெரியோர்களில் ஒருவராகத் திகழும் அண்ணல் முத்தமிழ்க்காதலர் கி.ஆ.பெ.வி அவர்களைப் பற்றி அவர்தம் நூற்றாண்டு விழாவில் பேசி அப்பேச்சு அச்சு வடிவம் பெறுவதென்பது அடியேனுக்குக் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அடியேனும் அண்ணலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏறத்தாழ 30 கல் தொலைவிலுள்ள இடங்களில் பிறந்து வளர்ந்தவர்கள்.' அண்ணல் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து 1934 முதல் அவர்தம் பூத உடல் மறையும் வரையிலும் (1994) விட்டு விட்டு நெருங்கிப் பழகியும், அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இணைந்து பணியாற்றியும் பேறு பெற்றவன் அடியேன். அவருடைய தமிழ் உணர்வும் தமிழ்த் தொண்டும் அடியேனையும் பற்றிக் கொண்டு தமிழ்ப்பணி (பெரும்பாலும் 1. அடியேன் விபரகம்பி (லால்குடி வட்டம்)யில் (தாய்விடு) பிறந்து வளர்ந்தும் பின்னர் கோட்டத்துகில் (தந்தை விடு) (இப்போது துறையூர் வட்டம்) வளர்ந்தும் வெவ்வேறு திசைகளில் தமிழ்ப் பணியாற்றியவர்கள்(அடியேன் பிறந்தது-1916) அண்ணலை விட அடியேன் 16 அகவை இணையவன். மு.12.