பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. எழுத்துப் பணி, திருப்பதியருகில் 4 ஊர்களில் தமிழ்ச் சங்கங்கள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் கண்டமை) ஆற்றவும் அண்ணலே முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்ற காரணங்களில் அடியேன் துணைக் காரணம் என்று கருதுகின்றேன். தோரணவாயிலாக - முன்னுரையாக சில கருத்துகளைக் குறிப்பிட்டு, முத்தமிழ்க் காதலர் கி.ஆ.பெ.வி. அவர்களைப் போற்றிப் பேசும் பேச்சைப் பெரியோர் கேண்மை என்ற முதற் பகுதியில் அண்ணலுக்கும் அடியேனுக்கும் ஏற்பட்ட தொடர்புகளைக் குறிப்பாகக் காட்டியுள்ளேன். 'முத்தமிழ்க் காதலர்’ என்ற இரண்டாம் பகுதியில் மிக்க இளமைக் காலத்தில் பெரியோர்களைத் துணைக் கொண்டதனால் இவர்தம் தமிழறிவும் தமிழுணர்வும் பெருகலாயிற்று என்பதை அண்ணலின் கூற்றாலேயே விளக்கியுள்ளேன். முத்தமிழ்க் காதலராக மாறிய, மூன்று தமிழ்களில் ஆழங்கால் பட்ட விவரங்களைச் சுட்டிக் காட்டியுள்ளேன். இந்த விவரங்கள் யாவும் அற்புதமானவை. பல்வேறு சிறப்புகளைக் கூறும் பாங்கு படிப்போர், கேட்போர் உள்ளங்களைத் தொடுபவை. “மெய்யிற் பொடியும்' என்ற சிலப்பதிகாரப் பாடலின் பொருளை விளக்கும் திறன் புலவர்களையும் தம் மூக்கின்மீது விரலை வைக்கச் செய்து விடும். இயற்றமிழிலில் இவர் படைத்த நூல்களைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியுள்ளேன். இங்ஙனமே இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணிகளையும் சுட்டியுள்ளேன். “வணிகர் திலகம் என்ற மூன்றாம் பகுதியில் முத்தமிழ்க் காதலர் கருத்துப்படி வணிகர் என்பவர் யார்? வணிகர் சின்னம் போல் நின்று தொழில் புரிபவரே நாணயமான வணிகர், 2. திருப்பதிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை கண்டு எம்.எ.எம்.பில், பிஎச்.டி.க்கு வழி வகுத்த முதற் பேராசிரியன் என்ற பெருமை அடியேனுக்கு உண்டு. கல்ைஞர் ஆட்சியில் (1969) ஆண்டிற்கு 10 ஆயிரம் நீதி பேற்று அது இன்று படிப்படியாக ஓர் இலட்சமாக அதிகரிக்கச் செய்தமைக்கு அடியேனே முதற் காரணம். துணைக் காரணங்கள். எமு மலையன் நிமித்த காரணம். பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பகங்கொண்டில் அல்லவ அவன்! -