பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலில் வெற்றி பெற வணிகர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், தந்தையார் மறைவுக்குப் பின் இவர் அடைந்த தொல்லைகள், அவற்றை இவர்தம் நா-நயமும், நாணயமும் தகர்த்த முறைகள், இவருடைய உயர்ந்த சரக்கு-உயர்ந்த விலை தத்துவம், வணிகர்கட்கு இன்றியமையாத சிக்கனம், சேமிப்பு, பாதுகாப்பு முதலிய பண்புகளைப் பற்றி அண்ணலாரின் கருத்துகள், அறச் செயல்கள் முதலியவை தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. 'சித்தாந்த வித்தகர்' என்ற நான்காம் பகுதியில் அண்ணல் சித்தாந்தத்தைப் பற்றிப் பேசிய உரைகளை விளக்கியுள்ளேன். இளமையில் சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் கழுத்தில் மணிமாலைகளை அணிந்திருந்தார் என்ற குறிப்புகள் கிடைக்கின்றனவேயன்றி வேறு விவரங்கள் அவர்களின் நூல்களினால் அறியக்கூடவில்லை. இப்பகுதியிலுள்ள கருத்துகள் யாவும் அண்ணலார் இப்படித்தான் பேசியிருக்கக் கூடும் எனக் கற்பனையில் கண்டு எழுதப் பெற்ற கருத்துகளைக் கொண்டது. இஃது அண்ணலாரின் சைவ சமய ஈடுபாட்டையும் அவர் சைவ இலக்கியங்களில் கொண்டிருந்த ஆர்வத்தையும் காட்டுவதாக அமைகின்றது. இப்பகுதி. 'சொல்லின் செல்வர் என்ற ஐந்தாம் பகுதியில், சாதுர்யமாகப் பேசும் அண்ணலின் நா-நயமும், தமிழ்இந்திக்கு இராஜாஜி கூறிய இட்லி-சட்னி, வேட்டி-சட்டை உவமைகளை உடைத்தெறிந்து பேசிய சாணக்கியத்திறன் தெளிவாக்கப் பெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர் என்ற ஆறாம் பகுதியில் திருச்சியின் திலகமாகிய அண்ணலின் மாநாடு நடத்திய திறமை, தமிழர் பெரும்படை அமைந்த சீர்மை, சென்னை மாநில இந்தி எதிர்ப்பு உரிமை ஆணையம் ஈன்ற ஒன்றை நிறுவிய பெருமை, பல்வேறு மட்டங்களில் இந்திதிணித்தலை எதிர்த்து நின்ற சமயோசிதப் பாங்கு ஆகியவை தெளிவாக விளக்கப் பெற்றன.