பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 : மூத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 'இல்லற தெறியாளர் என்ற ஏழாம் பகுதியில் அறிவியல் நோக்கில் அகப்பொருள் தத்துவம் விளக்கப் பெற்றது அவ்விளக்கம். "எல்லா உயிர்க்கும் இன்பம்’ (தொல்-பொருள் -பொருளியல்-27) என்ற தொல்காப்பிய நூற்பாவில் அடங்கியிருக்கும் அருமை சுட்டிக்காட்டப் பெற்றது. சங்ககாலத் திருமணம் குறிக்கோள் திருமணம், அகப் பொருள் இலக்கியத்தில் வரும் மாந்தர் அனைவரும் குறிக்கோள் மக்களே என்பவை சுட்டப் பெற்றன. ஏழாம் பகுதியில் அண்ணல் வாழ்க்கையில் அவர்நடத்தி வைத்த திருமணம் 2500 எண்ணிக்கையைக் கடந்திருக்கும் என்பது சுட்டப் பெற்றது. அவர் மேற்கொண்ட திருமண முறைகளும் வாழ்த்து முறைகளும் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்த்தை இருபது கட்டளைகளாக வகுத்துக் காட்டிய முறையொன்றை சடங்கு முறைகளுக்கு அதிர்வேட்டுக்களாகும் என்பது குறிப்பாகக் காட்டப்பெற்றது. இந்தப் பொழிவில் இதுவே மிகவும் முக்கியப் பகுதியாகும். மருத்துவ மாமணி என்ற எட்டாம் பகுதியில் நாட்டு வைத்தியம்' என்ற பெயரில் வழங்கும் சித்த மருத்துவமுறை தெளிவாக்கப் பெற்றது. அண்ணல் அவர்கள் இம்முறைக்கு முக்கியத்துவம் நல்க வேண்டும் என்பது அவர்தம் வேண்டுகோள். அண்ணல் அவர்கள் சில நோய்களையும் சுட்டி அதற்குரிய மருத்துவ முறைகளும் காட்டியமை விளக்கப் பெற்றது. அண்ணல் தம் வாழ்நாள் முழுதும் இம்முரையை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட முயற்சி காட்டப் பெற்றது." 'அநுபவ நாயகர் என்ற ஒன்பதாம் பகுதியில்96ஆண்டுகள் வாழ்ந்து நற்றொண்டு புரிந்த நாயகரின் அநுபவங்கள் அறிவுக்கு உணவு', 'எண்ணக் குவியல்', 'ஐந்து செல்வங்கள், 3. இதன் காரணமாகத்தான் சென்னையில் சித்த மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை. மூலிகைப் பண்ணை ஆகிய நிறுவனங்கள் அண்ணாநகரில் அண்ணா பெயரில் தொடங்கப்பெற்று நடைபெற்று வருகின்றன என்று கருதலாம்.