பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை * 173 ஆறு செல்வங்கள்', 'மாணவர்களுக்கு', 'அறிவுக்கதைகள்’ என்ற நூல்களில் அடங்கியுள்ளமை எடுத்துக்காட்டப் பெற்று எடுத்துக்காட்டுகளால் விளக்கப் பெற்றது. இவர் எழுதிய ஏனைய நூல்களிலும் இவர்தம் அநுபவச் சுடர்கள் தெறிக்கின்றன என்பதும் அறியத்தக்கது என்பதும் சுட்டப் பெற்றது. தமிழகப் புலவர் குழு கண்ட புரவலர் என்ற பத்தாம் பகுதியில் தமிழுக்காக இவர் மனம், மொழி, மெய்களால் உழைத்த உழைப்பின் நினைவுச்சின்னம். தமக்குப் பின்னரும் ஒரு நிலையான நிறுவனம் பணியாற்றவேண்டும் என்று கருதி பலமான அடிப்படையுடன் நிறுவினமை சுட்டப் பெற்று அவர்றின் நடைமுறையும் விளக்கப் பெற்றது. அண்ணலுக்குப் பின்னர் அண்ணல் கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகி வரும் அண்ணல் கண்டது 'தமிழகப் புலவர் குழு என்ற நிறுவனம் என்பது நினைவுறுத்தப் பெற்றது. 1899 -இல் பிறந்த குழந்தைக்கு 'விசுவநாதம் என்ற பெயரிடப்பெற்றது முறைவழிப்படும் ஆருயிர் என்ற கருத்தையொட்டிஎன்பதாகக் கருதலாம். நாதம்-ஒலி; விசுவம்அண்டப் பெருவெளி; ஐந்து பூதங்கள் அடங்கிய இடம். அதில் ஒலியின் அடிப்படையில் பிறந்தது மொழி. தமிழ் மொழியும் அவ்வாறு பிறந்ததே. இந்தப் பெயர் கொண்ட ஒரு மனிதர் 96 ஆண்டுகள் வாழ்ந்து கிட்டத்தட்ட80ஆண்டுகட்குமேல் தமிழ்த் தொண்டு புரிந்து தான் வந்த இடத்திலே அடங்கிப் போயிற்று என்று கருதலாம். நாதம் - ஒலி, விசுவம் - அண்டப் பெருவெளியில் அடங்கிப் போயிற்று, 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள், மெய்ப்பொருள்காண்பது அறிவு (குறள் - 358) என்ற குறளை விளக்குவதுபோல அமைந்தது - இக்குறளுக்குப் பரிமேலழகர் காட்டிய உரைப்படி. உலக மக்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு மனிதர் போல் வாழ்ந்து பரு உடலைக் களைந்து புகழுடம்பை