பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப்பற்றி. 84 அகவையை எட்டும் இந்த நூலாசிரியர் எம்.ஏ.பி.எஸ்.சி. எல்.டி. வித்துவான், பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் . த ைல ைம ய ர சி ரி ய ராக வு ம் (1941-50), பத்து ஆண்டுகள் ண காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் (1950-60) பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர்-பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஒய்வு பெற்றவர். 1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி - ஜூன் 1979) தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் 1986ஆண்டு மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 திங்கள்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் 'வைணவச்செல்வம் என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995 இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. (த.ப.க வெளியீடு) 1996 பிப்ரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தெற்கு-தென்கிழக்கு ஆசியநாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகப் பணியாற்றுபவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து (பிஎச்.டி.) டாக்டர் பட்டம் பெற்றவர். (அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாக