பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் : 21 (1) பெயர் சிறப்பு என்ற தலைப்பின் கீழ் வருவன: (அ) தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள் அக்காலத்திலேயே இனத்திற்கு ஒரு எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் 'பிரதிநிதித்துவம் வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த வல்லினம். மி - மெல்லினம், ழ் - இடையினம். (ஆ) தமிழுக்கு 'முத்தமிழ் எனவும் பெயர் உண்டு. இஃது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும். இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச் செய்யும். நாடகத் தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்புத்தும். (இ) சைவ சமயக்குரவருள் ஒருவராகிய சம்பந்தர் தம் பெயருக்கு முன் தமிழ் என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் தமிழ் ஞானசம்பந்தன்' என்று குறிப்பிட்டுக் கொண்டார். (ஈ) வைணவ சமய ஆழ்வார்கள் பலரும் பல்வேறு அடை மொழிகளிட்டு விட்டு சித்தன் விரித்த தமிழ்', 'கோதை வாய்த்தமிழ்', 'பரகாலன் பைந்தமிழ்', 'சடகோபன் செந்தமிழ்' என்று தமிழின் பெயரைச் சிறப்பித்துள்ளனர். (உ) நமது நாட்டிற்குச் செந்தமிழ் நாடு' என்று பெயர் சூட்டியவர் பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாக செம்மையும்' அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியது. (ஊ) தமிழ் தமிழ்’ என்று கூறிக் கொண்டே போனால், அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் பாவேந்தர். அந்த அளவோடு விட்டு வைக்காமல் தமிழுக்கு அமுதென்று பேர். அது எங்கள் உயிருக்கு நேர் எனவும் கூறிப் போற்றியவர்.