பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 20 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. முத்தமிழ்க் காதலர்: இப்பெருமகனார் சிலம்பை ஆழ்ந்து கற்றதனால் 'முத்தமிழ்க் காதலர்’ ஆனார் எனத் தோன்று கின்றது. இக்காவியம் கற்றதன் பயனாக, ஒ 'இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் (యుయాడిL என்று சொல்லும் அளவுக்குஇவர்தம் தமிழ்க்காதலின் ஊற்றம் அமைகின்றது. கவிதையின் மேன்மையையும் சிறப்பையும் நன்கு உணர்ந்த வடமொழி வாணர்கள் தலைவன் ஏவலாளனுக்குக் கூறுதல் போன்றவை அறநூல்கள் என்றும், நண்பர் ஒருவருக்கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒரு வகைப் பாகுபாடு செய்துள்ளனர்." இளங்கோ அடிகள் தாம் உணர்த்த வேண்டிய நீதிகளை இலைமறை காய்கள் போல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல், அற்புதமாக அமைத்துள்ளமை அண்ணல் விக்வநாதத்தின் உள்ளத்தை மிகவும் கவர்ந்திருத்தல் வேண்டும். காவியத்தில் உணர்த்தப் பெற்றிருக்கும் முத்தமிழ்க் குறிப்புகள் அவரிடம் முத்தமிழ்க் காதலை எழுப்பியிருக்க வேண்டும். இதனால் அவர் முத்தமிழ்க் காதலர்’ ஆனார் என்ற வண்மையையும் அறிய முடிகின்றது. 1.இயற்றமிழ்க் காதல் தமிழ் இலக்கியங்கள் ஆழ்ந்து கற்றதனால் விளைந்த அற்புதப் படைப்பு தமிழின் சிறப்பு" என்னும் நூல். இதனால் தமிழின் 16 செல்வங்கள் இருப்பனவாகக் காட்டுவர் அண்ணல் பெருமான். அவற்றுள் சில சுடர்விடும் நுண்ணியக் கருத்துகள்: 3. தமிழ் விடு துது - கண்ணி- 151 4. புட் இத்த்தன் பக் - 329 5. E நிலைய வெளியீடு: முதற்பதிப்பு 1969லும் ஐந்தாம்பதிப்பு 1993லும் வெளிவந்துள்ளன.