பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் தமிழின் சிறப்பையே தம் வாழ்வின் சிறப்பாகக் கருதியவர் திருச்சி விசுவநாதம். அதற்காக அப்பெருமகனார் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தவர். இவருடைய பேச்சும் மூச்சும், சொல்லும் செயலும், எண்ணமும் எழுத்தும் எல்லாமே தமிழாக இருந்து வந்தது. இவருடைய உள்ளத் திருக் கோயிலில் என்றும் நிலையாக மேலோங்கி இருந்தவை தமிழ் நலமும் தமிழர் நலமுமே. சிறந்த வணிகராகிய இவர் இவற்றையே என்றும் ஓயாது இலவசமாக விற்றுக் கொண்டிருந்தவர்; பரப்பிக் கொண்டிருந்தவர். மிக்க இளமையில் வள்ளுவர் வகுத்த நெறிப்படி 'பெரியாரைத் துணைக் கொண்டதனால் (அதி. 45) இவர்தம் தமிழறிவும், தமிழ் உணர்வும் பெருகலாயிற்று. "நான் ஒரளவு தமிழறிவு பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்த உயர்திரு மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா", பண்டித மணி கதிரேசச் செட்டியர்ர், நாவலர் ச. சோம சுந்தர பாரதியார் ஆகிய தமிழ்ச் சான்றோர்களுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறேன்’ என்று இவரே குறிப்பிட்டுள்ளமை யால் தெளியலாம். 1. தான் திருச்சி புனித சூசையப்பர்கல்லூரியில் பயின்று வந்த காலத்தில்(1934-39), இவரையும் நாட் டார் ஐயாவையும்திருச்சி தெப்பக்குளத்தருகிலுள்ள பிஷப்கல்லூரி வனாகத்தில்தடை பெற்றதமிழ் இலக்கி பகூட்டங்களில் பலமுறை கண்டு மகிழ்த்ததுண்டு. 2. 'தமிழின் சிறப்பு என்ற நூலின் முன்னுரையில்.