பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க்காதலர் : 23 கீழிருந்து வலிந்து ஒலித்தாக வேண்டும். அவை பஹுத் அச்சா ஹை என்பது போன்றவை. ஆண்டாள் நாச்சியார் வரலாற்றை கிருட்டிணதேவராயர் என்ற ஆந்திர மன்னர் 'ஆமுக்தமால்யதா' என்றுதெலுங்கு மொழியில் எழுதியுள்ளார். என் அரிய நண்பர் தெலுங்குப் பேராசிரியர் சதாசிவ ரெட்டி என்பார் அதைப் படித்தால் தம்' வாங்கும்; அடி வயிற்றைக் கலக்கும்’ என்று கூறுவார். அவரை ஒரு சுலோகம் பாடும்படி கேட்டேன். அப்படித்தான் இருந்தது. இன்னொரு தெலுங்குப் பேராசிரியர் டாக்டர் கோதண்ட ராமய்யா என்பவரைப் போதன்ன பாகவதத்தில் கசேந்திர மோட்சப் பகுதியைப் பாடும்படிக் (15 பாடல்கள்) கேட்டேன். அவை தேசி தெலுங்கில் (அதிகம் வடமொழி கலவாத தெலுங்கு) அமைந்திருந்தமையால் தென்றல் வீசுவதுபோல் இருந்தது! (4) எழுத்துச் சிறப்பு: பிறமொழி எழுத்துகளுக்கு இல்ாத ஒரு சிறப்பு:தமிழ் எழுத்துகளுக்கு உண்டு. அவற்றுள் ஒன்று'ழ' என்ற எழுத்து. இது 'சிறப்பு ழகரம்' எனக் குறிப்பிடப் பெறுவது. தமிழ் என்ற மொழியின் பெயரிலேயே 'ழ' கொலு வீற்றிருக்கின்றது. "இசைக் கருவிகள் யாவும் தமிழகத்தில் தமிழினால் கண்டுபிடிக்கப் பெற்று, தமிழிலேயே பெயரிடப் பெற்றுள்ளன. அதுவும் தமிழுக்கே சிறப்பாகவுள்ள “சிறப்பு ழகரத்தை" ஒவ்வொன்றிலும் பதிய வைத்து தோல் கருவிக்கு முழவு எனவும் துளைக் கருவிக்கு குழல் எனவும் நரம்புக் கருவிக்கு யாழ் எனவும் பெயரிட்டு இவை அனைத்தும் தமிழனின் சொந்தச் சொத்து என்பதை பண்டையிலேயே பதிய வைக்கப் பெற்றுள்ளது.