பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. வி. (5) சொற்சிறப்பு: தமிழ்மொழியிலுள்ள சிறப்புகளில் 'சொற்சிறப்பு என்பதும் ஒன்று. இச்சிறப்பு ஒரு தனித்தன்மை வாய்ந்தது. இதனைப் பிற மொழிகளின் காண இயலாது. தமிழ்ச் சொற்களின் தொகை ஏறக்குறைய 90,000 மட்டுழே. தமிழில் எந்தச் சொல்லும் ஏழெழுத்துக்கு உட்பட்டதே. தமிழில் எட்டெழுத்துச் சொல்லைக் காண முடியாது. 6, 7 எழுத்துச் சொற்கள் மிகச்சில. 5 எழுத்துச்சொற்களும் சிலவே. 4எழுத்துச் சொற்கள் பல. 3, 2 எழுத்துச்சொற்களே மிகப் பல. ஒரெழுத்துச் சொற்களும் தமிழில் உண்டு. அவை. (அ) ஆ - பசு - கோ - மன்னன் ந - நாக்கு தீ - நெருப்பு தா-கொடு மை - கருமை போ - செல்லல் ஈ - ஓர் உயிர், கொடு கா - காத்தல் பூ - மலர் என்பன போன்றவை. (ஆ) உருவம். பருவம்: பிற மொழிச் சொற்கள் உருவத்தை மட்டும் காட்டும். தமிழ்ச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் காட்டும். பேதை பெண் 5 வயதுக்கும் கீழ் பெதும்பை பென் 10 வயதுக்கும் கீழ் மங்கை பெண் 16 வயதுக்கும் கீழ் மடந்தை பெண் 25 வயதுக்கும் கீழ் அரிவை பெண் 30 வயதுக்கும் கீழ் தெரிவை பெண் 35 வயதுக்கும் கீழ் பேரிளம்பெண் பெண் 45 வயதுக்கும் கீழ் 8. ஆங்கிலத்தில் 23 எழுத்துச் சொற்களும் உண்டு.