பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 : மூத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 6. கவிதைச் சிறப்பு: கவிதை புனைவது ஒரு கலை. சொற்களைத் தொடுப்பதும் பூக்களைத் தொடுப்பதும் ஒன்று போன்றதே. தொடுக்கப் பெற்ற பூக்கள்'சரம்' என்று வழங்கும்; தொடுக்கப் பெற்ற சொற்கள் கவிதை என்ற பெயர் பெறும். தமிழ்ப் புலவர்கள் கண்ட கனவே கவிதை. அது சொற்களைக் குறைப்பதற்காகவும் நினைவிற் கொண்டு வருவதற்காகவும் தோன்றியது. பூக்களைத் தொடுப்பதற்கு நார் அமைதல் போல் சொற்களைத் தொடுப்பதற்கு சந்தி அமைக்கின்றது. சந்தி என்பது ஒரு சொல்லையும் மற்றொரு சொல்லையும் இணைக்கும் ஒருவித முறையாகும். அங்கு இருக்கும் - அங்கிருக்கும்; சங்கு ஊதும்; சங்கூதும்; பங்கு + ஆளி பங்காளி. இந்தச் சந்திகளால் கவிதைக்கு இரண்டு வித நன்மைகள் விளைகின்றன. ஒன்று, முதல் சொல்லின் இறுதி எழுத்தையும் வரும் சொல்லின் முதல் எழுத்தையும் சேர்த்து ஒரு சொல்லாக ஒட்டுவது. மற்றொன்று, இச் சொற்களின் பொருள் கெடாமலும் ஒசை கெடாமலும் அவற்றிலுள்ள ஒவ்வோர் எழுத்தைக் குறைத்து விடுவது. நினைவாற்றலுக்குக் கவிதைகள் துணை செய்கின்றன. கவிதைக்குத் துணை செய்வன அதிலுள்ள மோனையும் எதுகையுமாகும். இவை இரண்டுமின்றிக் கவிதை அமையாது. அமைந்தாலும் அது நினைவில் அமையாது. சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. அதனை அண்ணல் உரைநடையில் 320 சொற்களில் அமைக்கின்றார். இக் காட்சியை 74 எழுத்துகளாகச் சுருக்கிப் பொருள் கெடாமல் இளங்கோ அடிகள் தொடுத்த கவிதை இது. மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கேன் கண்டனவே தோற்றான்.அக்காரிகை தன்சொற்செவியில் உண்டனவே தோற்றான் உயிர்' 7. சிலபதிக்டிேம் 11