பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் : 27 இக்கவிதையில், (1) 320 எழுத்துகளை 74 எழுத்துகளாகக் குறைத்தும் பொருள் குறையவில்லை. (2) கவிதையாக அமைக்கப்பெற்றதால் நினைவாற்றலுக் குள் அடங்குகின்றது. ஆனால், அண்ணல் காட்டிய உரைநடை அடங்காது. (3) மெய் - விரி; கை-கண் கண்ட-காரி - உண்ட உயிர் என்பன மோனைகள். (4) மெய்யில் - கையில்; கண்ட உண்ட என்பன எதுகைகள். இவை நினைவாற்றலுக்குத் துணை செய்பவை. (5) கண்ட + அளவு - கண்டளவு. உண்ட + அளவு - உண்டளவு; ஆனது சந்ததியினால் இது கவிதைக்குள் ஒட்டுமுறை. (6) கவிதையோ, மெய்யில் தொடங்கி உயிரில் முடிகின்றது. . (7) மெய் - உயிர் என்பதால் உடம்பைக் கண்டு உயிர் போயிற்று என்பதும் உண்மையைக் கண்டு உயிர் போயிற்று என்பதும் பொருள் நயங்கள். (8) உடலிற் புழுதி அவள் ஓடி வந்த தோற்றம்; அவிழ்ந்த கூந்தல் கணவனிழந்த தோற்றம்; கையிலுள்ள சிலம்பு தன் கணவன் கள்வனல்லன் என்பதற்குச் சான்று; கண்களிலிருந்து வழியும் நீர் வாழ்விழந்த தோற்றம்; காரிகையின் சொற்களிலே உண்மை; இந்த ஐந்தையும் கண்டதுமே கணவன் உயிரையும் மன்னன் உயிரையும் தோற்றான் என்பது கருத்து நயம். (9) மன்னன் தன்மீது பழி போக்கும் முன்னே உயிர் போக்கிக் கொண்டது ஒரு தமிழ்ப் பண்பாடு. இங்கு அண்ணலாரின் உரை விளக்கம் முத்தமிழ் உரை விளக்கமாகவே அமைகின்றது. அதன் ஏழு நயங்கள், ஐந்து கருப்பொருள்கள் படிப்போர் படித்தே நுகர்தற்குரியன. உயிர் பறி கொடுத்து மெய்யாக வந்த கண்ணகி, அரசியையும்