பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. வரும் இழந்தவன் என்ற சொல்லுக்குப் பன்னி உரைக்கும் ஆழ் பொருளும் (முதற் பகுதி - பக் 43) நம்மை வியக்க வைக்கின்றன. "கைவேல் களிற்றொடு (774) என்ற குறளில் வரும் 'தகும் என்ற சொல்லுக்குப் பொருள் கூறும்போது என்ற சொல்லுக்குக் காட்டும் பொருளும் (இரண். பகுதி பக் 40-4) 'கூத்தாட்டவைக் குழாத்து (332) என்ற குறளுக்கு செல்வம் வருதலும் போதலும் பற்றி இவர் கூறும் விளக்கமும் நம்மை வியக்க வைக்கின்றன. இவ்விடத்தில் ரசிகமணி டி.கே.சி. கூறும் விளக்கத்தையும் நினைவு கூர்கின்றோம். 'செல்வம் சேர்தல் மெதுவாக நீண்ட காலமாக நடைபெறும் என்பது முதல் அடியிலுள்ள நான்கு நீண்ட சீர்களாலும், செல்வம் போதல் விரைவாக நடைபெறும் என்பதை இரண்டாம் அடியிலுள்ள மூன்று குறுகிய சீர்களாலும் குறிப்பால் புலப்படுத்துகின்றார், வள்ளுவர் ' என்பது ரசிகமணியின் 象。努辦。 (3) வள்ளுவரும் குறளும்: இது கோவை திருவள்ளுவர் படிப்பகத்து ஆண்டு விழாவில் (1953) அண்ணல் விசுவநாதம் பேசிய பேச்சு. கொம்பு, சுழி மாறாமல் உலக அறிவியல் அறிஞர் .ே). தாயுடு அவர்களால் ஒலிப்பதிவு செய்யப்பெற்று அச்சு வடிவம் பெற்றது. திருக்குறள்பற்றி அனைத்து செய்திகளையும் சுருக்கமாக அறிந்து கொள்வதற்கேற்ற கையேடு. அண்ணல் சுவை படப் பேசுவதில் வல்லவராதலால், நுண்ணிய கருத்துகளுக்கு அழகிய வடிவம் தந்திருக்கும் நேர்த்தியையும் வினா விடை புகுத்தி கேட்போருக்கு விருந்து அளித்தலையும் நூலெங்கும் குமிழியிடுவதைக் காணலாம். உவமைகள் எல்லாவற்றிற்கும் கதை வடிவம் தந்திருப்பது அண்ணலாரின் தனிப்பெருமை. இதை இந்நூலில் காணலாம். நகையாசையைப்பற்றிப் பேசுவோர்போல் தொடங்கி கண்ணுக்கு அணிகலமாகும் கண்ணோட்டத்தைப் பற்றிக் கூறும் இடம் (பக் 41) நயம் செறிந்தது. வள்ளுவர் ஒரு சூதாடி’