பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. மகிழ்ச்சி என்பதை நாம் அறிவோம். அதிலும் யானைப் போரைப் பார்ப்பதால் அவன் அடையும் மகிழ்ச்சிப் பெருக்குக்கு அளவே இல்லை. இதில் யானை தன் பக்கம் திரும்பினால் தீங்கு விளையுமே என்ற அச்சமும் நெஞ்சைக் கிள்ளும். ஆனால் குன்றின்மீது ஏறி நின்று அப்போர்க் காட்சியைக் காண்பதில் அவனுக்கு அச்சம் ஏற்படாது. அஃது எப்படிப் பட்டது என்பதைப் பொய்யாமொழியார் அடியிற் கண்டவாறு விளக்குவார். அதிக முதல் போட்டுத் தொழில் செய்யும் ஒரு வணிகன், தன் வாணிகத்தை எவ்வித இழப்புமின்றி வெற்றியோடு செய்து மகிழ்ச்சி அடைகின்றானோ அது போன்று யானைப் போர்க் காட்சியைக் கண்டவனும் மகிழ்ச்சி அடைவான். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான்வினை(758) என்பது பொய்யாமொழி. இதனை ஒவ்வொரு வணிகரும் தம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்வதொன்றாகும். பொருள் செயல் முறை: வாணிகத்தில் பொருள் செயல் வகையையும் சுட்டியுரைக்கின்றார் இந்தக் கலைமாமணி. அவர்தரும் எச்சரிக்கை: எப்படியும் தொழில் செய்யலாம், எந்த வகையிலும் பொருள் சேர்க்கலாம் என்பது வணிகமுறை அல்ல. தீமையான செயல்களை நீக்கி, நல்ல வழிகளைக் கையாண்டு நேர்மையான முறைகளில் பொருள் சேர்ப்பதே 'சிறந்த வாணிகம் ஆகும். அஃது ஒன்றுதான் அறமும் இன்பமும் கலந்த மகிழ்ச்சியை நல்கும். அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (154) என்ற குறளின் மூலம் இக்கருத்தை வெளியிடுகின்றார் அச் செந்நாப்புலவர். தொழிலில் வெற்றிபெற: ஒரு வணிகன் தன் தொழிலில் மேம்பாடு அடைந்து வெற்றி பெறத் தேவையானவை என்னென்ன என்பது ஒரு வினா. பொருள் என்பர் சிலர்: