பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர் திலகம் & 43 வாணிகம் செய்யும் அன்பர்களுக்கு வள்ளுவர் பெருமான் காட்டும் ஒரு புதிய வழியை நமக்குக் காட்டுவதை கி.ஆ.பெ.வி. வணிகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். எல்லா வாணிகமும் வாணிகமல்ல; அஃது ஒர் உயர்ந்த முறையில் அமைய வேண்டும். எப்படி? வணிகத் தொழில் புரிகின்றவர்கள் பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதிச் செய்ய வேண்டும். நூலாசிரியர்கள் தம் நூல்களைத்தம் செலவில் அச்சிட்டு அவற்றையும் பொட்டலங் களாகப் பாதுகாப்பு முறையில் தருபவற்றைப் புத்தக வணிகர்கள் காப்பாற்ற வேண்டும் என்ற குறிப்பும் இதில் அடங்கியுள்ளது. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் (120) என்ற பொய்யாமொழியில் இக்கருத்து அடங்கியிருத்தலைக் கண்டு மகிழலாம். நாணயம்-யணம்: ஒரு வாணிகத்திற்குப் பொருள் தேவை; அதாவது மூலதனம் இன்றியமையாதது. 'முதல் இல்லாதோர்க்கு ஊதியம் இல்லை என்பது ஒரு பொன் மொழி. கி.ஆ.பெ.வி கருத்துப்படி முதல் வைத்துத் தொழில் செய்பவன்தான்முதலாளி. கடன் வாங்கித் தொழில் செய்பவன் முதலாளி ஆகான். வேண்டுமானால் "கடனாளி என்று திருநாமம் சூட்டலாம். கடன் வாங்கி வாணிகம் செய்பவன் வெற்றி பெற முடியாது. வாணிகத்தில் வரும் இலாபம்’ அனைத்தையும் வட்டி விழுங்கி விடும். 'யானை அசைந்து தின்னும்; வட்டி அசையாமல் தின்னும் என்பது நம் ஆன்றோர் கண்ட பழமொழி. "காசுக்கு எட்டு சட்டி வாங்கி ஒரு சட்டியை எட்டுக் காசு வீதம் விற்றாலும் வட்டிக்குக் கட்டாது' என்பது மற்றொரு பழமொழி. இன்னொரு கருத்தையும் கி.ஆ.பெ.வி. விளக்கத்துடன் காட்டுவார். ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை ஆகியவற்றைப் பார்ப்பதில் மனிதனுக்கு மட்டற்ற