பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. வாய்ப்புகள் பெறுவதனாலேயாகும். இந்தப் பல்வேறு அதுவபங்கள்- பட்டறிவு அவர்களைத் திறமைசாலிகளாக்கு கின்றன." வணிகம்; எது வாணிகம்? கி.ஆ.பெ.வி கூறுவார்: பொருள்களைக் கிடைக்கும் இடங்களில் வாங்கி கிடைக்காத இடங்களில் விற்பதும், விளையுமிடங்களில் வாங்கி விளையாத இடங்களில் விற்பதும், உற்பத்தி செய்யும் இடங்களில் வாங்கி உற்பத்தி செய்யாத இடங்களில் விற்பதும், கிடைக்கும் காலங்களில் வாங்கி கிடைக்காத காலங்களில் விற்பதும் வாணிகம். மேலும் உழவர்கட்கும் தொழிலாளி கட்கும் பொதுமக்களுக்கும் ஒரு பாலமாய் அமைவதும் வாணிகம் ஆகும். இதனைச் செய்யும் வணிகர்கட்கு ஊதியம்' அடைய உரிமை உண்டு. அஃது ஒர் அளவுக்கு உட்பட்டிருக்கும் "இலாபம் என்று பெயர் பெறும். அளவுக்கும் மீறினால் அது 'கொன்னை' என்றாகிவிடும்' வணிகச் சின்னம்: வணிகரின் சின்னமாக இருப்பது தராக" சான்றோர்கட்கு அறம் சொல்ல வந்த வள்ளுவப் பெருந்தகை வணிகப் பெருமக்கள் அன்றாடம் கையாளுகின்ற தராசைச் சுட்டிக்காட்டி அதன் நடுமுள் எப்படி இரு பக்கமும் சாய்ந்து விடாமல் நிற்கின்றதோ, அப்படியே சான்றோர்கள் தங்கள் உள்ளத்தை நடுநிலைமை பிறழாமல் வைத்திருத்தல் வேண்டும் எனச் சாற்றுகின்றார். சமண்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி (18) என்பது அவர்தம் திருவாக்கு. இஃது எவ்வளவு உயர்ந்த இடம் என்பதை ஒவ்வொரு வாணிகரும் எண்ணிப் பார்த்து இறும்பூது அடையலாம். 2. எது வியாபாரக்! வர் வியாபாசி! - பக்.5 3. கேத்: நூல் பக். 1.2 4. நீதித் துறைக்கும் இதுவே சின்னமாகும்.