பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[3] வணிகர் திலகம் கலைமாமணி கி.ஆ.பெ. விசுவநாதம் வறுமையிலும் செம்மாந்து நின்றவர். செல்வம் மேலோங்கிய நிலையிலும் செருக்கின்றி வாழ்ந்தவர். அவர்தம் சீரிய வாழ்க்கை வணிகர் குலத்திற்கே கலங்கரை விளக்கமாக - துருவ மீனாக நின்று நிலவுகின்றது. இப்பெரியாருக்குத் துணையாக நின்றவை மூன்று, 1. நாணயம் - பணம். 2. நாணயம் - சொன்னபடி இருப்பதும் நடப்பதும். 3. நாணயம் - நா நயம். இவற்றை இக்கட்டுரையில் விளக்குவோம். வணிகர்: வணிகர் என்பவர் யார்? கி.ஆ.பெ.வி அவர்களின் கருத்துப்படி மக்களுள் அதிகத்திறமைசாலிகளாக இருப்பவர்கள் வணிகர்களே. இதற்குக் காரணம் என்ன? அவர் கூறுவார். ஏழைகளிடத்தும் செல்வர்களிடத்தும், அரசாங்கத் திடத்தும் பொதுமக்களிடத்தும், கிழவர்களிடத்தும், இளைஞர்களிடத்தும், குழந்தைகளிடத்தும், ஆண்களிடத்தும், பெண்களிடத்தும், நல்லவர்களிடத்தும், பொல்லாதவர் களிடத்தும், படித்தவர்களிடத்தும், பாமரர்களிடத்தும், அறிந்தவர்களிடத்தும், அறியாதவர்களிடத்தும் பழகுவதற்கு 1. வணிகர் - வணிகம்' என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். 'வாணிகம்' என்ற சொல் வள்ளுவரால் கையானப் பெறுகின்றது. வணிகர் செய்யும் தொழில் 'வாணிகம் வசுதேவர் மகன் வாசுதேவன் என்பது போல. சிறிய வாணிகத்தை வியாபாரம்' என்ற சொல்லாலும் பெரிய வணிகத்தை 'வர்த்தகம்' என்ற சொல்லாலும் குறிப்பது தடைமுறை, வாணிகர் சங்கப் புலவர்களுள் ஒருவர் கூலவாணிகம் சாத்தனர். எனினும், வணிகர் - வாணிகம் என்பவற்றையே நாம் கையாளுகின்றோம்.