பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. ஒரு துடிப்பு காணப் பெறுவதே நடிப்பாகும். அந்நடிப்பும் ஆரவாரத்தில் தோன்றாமல் அமைதியில் தோன்றியதாக வேண்டும். அதை உணர்ச்சியற்ற நடிசரிடத்தில் ஒருபோதும் காண முடியாது. வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு பிள்ளைத்தாட்சி வேடம் போட்டுக்கொண்டு திருச்சி மணிக் கூண்டருகில் பட்டப் பகல் 12 மணிக்கு சித்திரை மாதத்து வெய்யிலில் கொதிக்கும் தரையில் மகப்பேறு பெறும் நிலையில் மயக்கமிட்டு கிடக்கும் நிலை, அருகில் மூன்று குழந்தைகள், அடுத்துக் கணவனது கவலை கொண்ட முகம் - பெருங்கூட்டம், காசுக் குவியல் - இந்தக் காட்சி சிறந்த நாடகக் காட்சி என்று கூறுவார்". "இது நடிப்பு: இவள்தான் நடிகை!” என்பது அண்ணல் தரும் சான்றிதழ்! 'தமிழின் சிறப்பு என்ற நூலில் நாடகச் சிறப்பு' என்ற கட்டுரை நம் அண்ணலின் நாடகத் தமிழ்பற்றிய அறிவுத்து சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். இவர்தம் 'தமிழ்ச் செல்வம்' என்ற நாடக நூல் மற்றோர் எடுத்துக்காட்டு. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரின் அணிந்துரையைக் கொண்டது. புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களாகிய டி.கே.எஸ் சகோதரர்கள் இதனை நடித்து நாடெங்கும் பரப்பினர். டில்லி, சென்னை, திருச்சி, மைசூர் வானொலிகள் நடித்து ஒலி பரப்பி நாடறியச் செய்தன. இங்ங்னம் பல்வேறு வகையில் தமிழ்த் தொண்டு புரிந்த திருச்சி விசுவநாதத்துக்கு திருச்சி தமிழ்ச் சங்கம் 1957இல் 'முத்தமிழ்க்காவலர்” என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. இப்பெயரே அவர் இயற்பெயராகவும் நிலைத்து விட்டது 'விசுவநாதமே முத்தமிழ்க் காவலர்; முத்தமிழ்க் காவலரே விசுவநாதம்” என்ற மரபும் நிலைத்து விட்டது. 15. தமிழின் சிறப்பு என்ற நூலில் நாடகச் சிறப்பு என்ற கட்டுரையில் பக்95-96 17.இது பக்திலையவெளியீடு. இதன்3ஆம்பதிப்பு:1982ல்வெளிவந்தது (முதற்பதிப்பு:1955)