பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் * 39 படத்தைப் போட்டு அழகிய சிறு குறிப்புடன் வெளியிடப் பெற்றிருந்தது. இவர்தம் இசைப்புலமைக்குச் சான்று இவர்தம் 'இசைச்சிறப்பு என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரையாகும்." இதையே விரித்து அடிக்குறிப்புகளுடன் எழுதினால் பல்கலைக்கழக எம்.லிட் அல்லது எம்.பில் பட்டத்திற்குத் தகுதியுடையதாகும். இசைபற்றிய பல்வேறு துணுக்கச்செய்திகள் அடங்கிய கட்டுரையாகும் இது. 3. நாடகத்தமிழ்க் காதல் நாடகத் தமிழிலும் நம் அண்ணலுக்குக் காதல் உண்டு. இவர் இயற்றமிழைப் பலாப்பழத்துக்கும் இசைத்தமிழை மாம்பழத்துக்கும், நாடகத் தமிழை வாழைப்பழத்துக்கும் ஒப்பிட்டுப் பேசி மூன்றின் பெருமையையும் முப்பழத்தின் பெருமையோடு ஒப்பிடுவார். நாடகம் என்பதற்கு உள்ளத்தில் உணர்ச்சி தூண்டுவது என்று பொருள்படும். நாம் ஒரே இடத்தில் இருந்துகொண்டு காடு, மலை, நாடு, நகர், ஆறு, அரண்மனை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்தும், பலவகையான வேடங்களைத் தாங்கிய பல்வேறு மக்களின் போக்கு, குணம், செயல் அனைத்தையும் ஒரே நேரத்தில் கண்டும் கேட்டும் உணர்ச்சி பெறுகின்ற ஒரே கலைக்கூடம் நாடகம் என்பது. நாடகக் கலை ஓர் உயர்ந்த கலை. பல மாதங்கள் பல மேடைகளில் பேசி மக்கள் உள்ளத்தில் பதிய வைக்கின்ற கருத்துகளைஒரே நாளில் ஒரே நாடகத்தின் மூலம பதிய வைத்து விட முடியும். அவ்வாறே பல ஆண்டுகள் படித்து அறியக்கூடியவற்றை, பல திங்கள்கேட்டு அறியக்கூடியவற்றை ஒரு நாளில் ஒரே நாடகத்தைப் பார்த்து அறிய முடியும். நடிப்பது என்பது போலி'; அஃதாவது உண்மை யல்லாதது. நடிப்பு அனைத்தும் நடிப்பாகி விடாது. நடிப்பில் 15. தமிழின் சிறப்பு என்ற நூலில் பக்.79-89