பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. போடப் பெற்றன. இன்று கிடைப்பவை பஞ்ச மரபும் சிலப்பதிகாரமுமே. 2. இசைத்தமிழ்க் காதல்: நம் அண்ணல் இசைத் தமிழ்க்காதலர். திருவனந்தபுரம் தி. இலக்குமணப் பிள்ளையிடம் இசையறிவு பெற்றவர். இதனால் நல்ல இசைப்புலமை ஏற்பட்டது. தமிழ் நாட்டில் தமிழ் இசை இயக்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. தமிழிசைப் பெருமை குறித்தும் தமிழிசை இலக்கியம் குறித்தும் பல கூட்டங்களில் நன்கு விளக்கிக் கூறி எதிரிகளின் உளுத்த வாதங்களை அடக்கியவர்; சான்றுகளுடன் விளக்கி உண்மை நிலையை நிறுவிக்காட்டியவர். - தம் அண்ணலால் இசை இயக்கம் பற்றிப் பல மாதங்கள், பல ஊர்களில், பல்வேறு மாநாடுகளில் பல நூறு சொற்பொழிவுகள் செய்து மக்களை விழிப்படையச்செய்தவர். இவற்றுள் குறிப்பிடத்தக்கது இவர் நடத்திய தமிழிசை மாநாடு. இது இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் முன்னிலையில் வியக்கத்தக்க முறையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ் நாட்டிலுள்ள இசைவாணர்கள் அனைவருமே பங்கு கொண்டு சிறப்புச்செய்தனர். ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து அரிய சொற்பொழிவு செய்தார். அடுத்து, மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் இசை நடிப்பு' என்ற தலைப்புகளில் உருக்கமான பொழிவுகள் நிகழ்த்தினார் நம் கலைமாமணி. இம்மொழிவுகள் மாநாட்டு மலரிலும் வெளி வந்துள்ளன. கும்பகோணம் மாநாட்டில் அவ்வூர் (வழக்கறிஞர் எல். ஆராவமுத ஐயங்கார் நடத்தியது) திருச்சி இசைமாமணி, விசுவநாதம் ஒன்றரை மணிநேரம் மிக உருக்கமான அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழிசைக்கு ஆதரவாகப் போராடிய கல்கி (10-5-1953) இதழில் நம் அண்ணலின்