பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காதலர் * 37 தமிழ்ச் சான்றோர்கள் ஒழுக்கத்தை உயர்ந்த ஒன்றாக்கினார்கள். இலக்கியத்தை அகம், புறம் என இரண்டாக்கினார்கள். தமிழை இயல், இசை, நாடகம் என மூன்றாக்கினார்கள். காற்றைக் கோடை, கொண்டல், வாடை, தென்றல் என நான்காக்கியும், நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக்கியும், சுவையை இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உப்பு, உவர்ப்பு என ஆறாக்கியும், இசையைக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழாக்கியும் பாகுபடுத்திக் கண்டனர். உலகில் எந்த நாட்டினரும், எந்த மொழியினரும், எந்த அறிஞரும், ஆறாவது நிலத்தையும், ஏழாவது சுவையையும், எட்டாவது இசையையும் இன்னும் கண்டாரில்லை. இசையின் ஒலிச் சுருக்கமாக ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனக் குறித்தனர். இசையைச் சங்கீதம் எனவும், பண்ணை இராகம் எனவும், அலகைச் சுரம் எனவும் மாற்றித் தமிழிசையையே கர்நாடக இசை எனக் கூறி அது தமிழிசைக்கு வேறானது என்றும் கூறிக் கொண்டுள்ளனர். கர்நாடக இசை என்பது தமிழிசை என்பதும் ஒன்றே; வேறல்ல. கர்நாடக இசை என்பதிலும் தவறில்லை. கர்நாடகம் என்பது பழமை என்பதையும், கர்நாடக இசை என்பது பழமையான இசை என்பதையுமே சுட்டும். சிலப்பதிகாரம் மூன்றாவது காதையாகிய அரங்கேற்று காதையில் இளங்கோ அடிகள் இசை நுணுக்கத்தை, அமைப்பை, அழகை, இலக்கணத்தை மிக விரிவாகக் காட்டியுள்ளார். இதுவே 1800ஆண்டுகளுக்கு முந்தியது. அதில் காணப்படும் மேற்கோள்களாகக் காட்டப் பெறுகின்ற இசை நுணுக்கநூல்கள் எத்தனைஆயிரம் ஆண்டுகட்கு முந்தியனவோ யார் அறிவார்? அந்நூல்களின் பெயர்கள் 1. பெருநாரை, 2. பெருங்குருகு, 3. பஞ்சபாரதீயம், 4. இசைநுணுக்கம் என்பன. இவற்றில் ஒன்று கூட இன்றில்லை. அனைத்தும் காலத்தால் அழிந்தன; கரையான்களால் தின்னப் பெற்றன. பகைவர்களால் எரிக்கப் பெற்றன. ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் அள்ளிப்