பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. (6) 'கோவலனை விட்டுத் தனித்திருந்தபோது மங்கல அணியைத் தவிர கண்ணகி பிற அணிகளை அணியா திருந்தாள்' என்பது இளங்கோ அடிகளின் கூற்று. இது தாலி என்பது அண்ணலாரின் கருத்து. (7) ஒவியத்துள் ஓர் ஓவியம் காட்டிய பெரும் புலவர் (பக். 30} (8 அக்காலத்தில் மதுரை மாநகரில் சான்றோர் ஒருவர் கூட இல்லை. (பக். 39) (9) வரந்தரு காதையில் 'பரிவும் இடுக்கணும்' என்று தொடங்கி, அல்லவை கடிமின் என முடியும் பத்து அடிகளில் உள்ள அறிவுரைகள் உலக மக்கள் அனைவரையும் நோக்கிக் கூறியவை. 4. திருவருட்பச: பாரினில் பரந்த நோக்கமுள்ள வள்ளலார் பேரிலும் அவர்தம் படைப்பான திருவருட்பா பேரிலும் பரந்த நோக்கமுள்ள அண்ணல் விசுவநாதத்திற்கு ஈடுபாடு இருந்தது வியப்பில்லை. 1980ஆம் ஆண்டு சனவரி 9, 10 நாட்களில் அண்ணல் விசுவநாதம் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளே "வள்ளலாரும் அருட்யாவும் என்ற நூல் வடிவம் பெற்றுள்ளன. இந்நூல் இராமலிங்க அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளும் அவர்தம் திருவருட்யா பற்றிய குறிப்புகளும் அடங்கியது. இக்குறிப்புகளை விரித்து எழுதினால் அது விரிந்த பெரு நூலாகத் திகழும். ஆக இக்கூறிய நூல்களனைத்தும் திருச்சி வணிகர் திலகத்தின் இயற்றமிழ்க் காதலுக்கு எடுத்துக்காட்டு களாக அமைகின்றன. இசைத்தமிழ்: இசைத்தமிழ் முத்தமிழில் ஒன்று. இது தமிழகத்தின் சொந்த சொத்து. இசைத்தமிழ், தமிழர், தமிழகம் தோன்றிய காலம் தொட்டே தோன்றி உலகத்தின் தொன்மையான தொன்றாகக் காட்சி அளிக்கின்றது.