பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ த்தமிழ்க் காதலர் : 35 தோன்றியுள்ளது. இளங்கோ அடிகளின் சிலம்பு இந்நூலாகச் சுருங்கி அனைத்துச் செய்திகளையும் அடக்கிக் கொண்டுள்ளது. இந்நூல் இளங்கோஅடிகள், காப்பியத்தில் ஒரு பார்வை, காப்பியச் சுவை என்று மூன்று தலைப்புகளாக நடை பெறுகின்றன. திருக்குறளைச் சிறப்பிக்க வந்த கபிலர், தினையளவு போதாச் சிறுபுன்னி நீண்ட பனையளவு காட்டும் படித்தால்" என்று கூறும் கருத்து நம் அண்ணலின் நூலுக்கு நூற்றுக்கு நூறு ஒக்கும். தவிர, அண்ணல் சிலம்பை திறனாய்வு நோக்கிலும் காண்கின்றார். சில கருத்துகள்: (1) கண்ணகியின் பெயர் கண்ணழகி" என்றிருக்க வேண்டும். இதன் சுருங்கிய வடிவமே கண்ணகி என்பது. (2) தமிழகத்தில் இன்று கிடைக்கின்ற பழமையான இலக்கண இலக்கிய நூல்கள் மூன்று. அவை தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம். மூன்றும் முதல்நூல்கள். (3) தமிழ் நாட்டிற்கு 'தமிழ்நாடு என்ர பெயரை முதன் முதலில் சூட்டிய பெருமை இளங்கோஅடிகளுக்கு உரியது. 'தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதிர் மதுரை என்பது அவர் திருவாக்கு. (4) இளங்கோ அடிகள் கண்ணகியைக் குலமகளாகவும் மாதவியைக் கலை மகளாகவும் (விலை மகள் அல்ல) காட்டி கற்பின் திறத்தில் இருவரையும் ஒன்றாகவே வைத்து எண்ணியவர். (5) சீத்தலைச் சாத்தனார் சங்கப் புலவர். சீத்தலை என்ற ஊரினைச் சார்ந்தவர். கூல வாணிகன் சாத்தனார் என்பவர் மதுரையைச் சார்ந்தவர். இளங்கோஅடிகட்குத் துணை புரிந்தவர். இருவரும் ஒருவர் அல்லர். 14.திருவள்ளுவமலை-5 (கபிலர்)