பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. முக்கால் பகுதியில்: வலியறிந்து செய்தல், காலம் அறிந்து செய்தல், இடன் அறிந்து செய்தல் என மூன்று. முழுப்பகுதியில்: வினைத் தூய்மை, வினைத் திட்பம், வினை செயல் வகை என மூன்று. திருக்குறளில் எந்தப் பொருளுக்கும் இந்தத் துணைத் தலைப்புகள் இல்லை. இதிலிருந்து மக்களாய்ப்பிறந்தவர்க்குப் பெரிதும் வேண்டப் பெறுவது செய்திறனே என்று அறிய முடிகின்றது. (5) வள்ளுவர் உள்ளம்: இது திருச்சி பொன்மலை திருக்குறள் கழகத்தில் தமிழ்த்திருநாள் கூட்டத்தில் அண்ணல் நிகழ்த்திய சொற்பொழிவு; நூல் வடிவம் பெற்றது இது. 'உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல் (596) என்பதுவே "வள்ளுவர் உள்ளம். இந்த உள்ளத்தில் நாடுபற்றிய உள்ளம், வாழ்வுபற்றிய உள்ளம், நடைபோடும் உள்ளம், தந்தை உள்ளம், துறவியுள்ளம், ஒழுக்க உள்ளம், அன்பு உள்ளம், அருள் உள்ளம், இரக்க உள்ளம், அரச உள்ளம், பிச்சைக்கார உள்ளம், விருந்துள்ளம், வேடன் உள்ளம், உண்மை உள்ளம், சூதுள்ளம், குடிகாரர் உள்ளம், காதல் உள்ளம், பகை உள்ளம், நட்புள்ளம், வியப்புள்ளம், கேடுள்ளம், ஆராய்ச்சியுள்ளம், மக்கள் உள்ளம், ஆண்மை உள்ளம், பெண்மை உள்ளம் என்று பல உள்ளங்கள் அடங்கியிருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவார்.அண்ணல். இவை தவிர இந்நூலில் வறுமை உள்ளம், நோய் உள்ளம் என்ற உள்ளங்களும் அடங்கியுள்ளன. ஒருவருடைய உயர்வு அவருடைய உள்ளத்தனையது என்பது வள்ளுவர் பெருமான் நமக்குக் காட்டும் உண்மை. 3. சிலப்பதிகாரம்: 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று பாரதியார் போற்றிய சிலம்பைப் பற்றிய அண்ணலாரின் படைப்பு இளங்கோவும் சிலம்பும் என்பது. அவதாரத்தில் வாமனத்திலிருந்து திரிவிக்கிரமம் வளர்ந்ததாக வரலாறு. ஆனால் இங்கு திரிவிக்கிரமத்திலிருந்து வாமனம்