பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. தந்தையார் இறந்தபின்: தந்தையார் திருநாடு அலங்கரித்த போது கி.ஆ.பெ.வி.யின் வயது முப்பது. வாணிக நிலை மன நிறைவு தருவதாக இல்லை. தொழிலில் ஏற்றமும் இறக்கமும் ஏற்படுவது இயல்பு. “ஆறுகிடும் மேடும் மடுவும் ஆம் செல்வம்’ என்பது ஒளவை மூதாட்டியாரின் திருவாக்கு. குடியிருக்க அரைவீடும், சோற்றுக்கு ஒரு ஏக்கர் நிலமும்தான் இருந்தன. வேறு சொத்து, ரொக்கம் எதுவும் இல்லை. வாணிகத்தில் இவர்கட்கு வரவேண்டிய நிலுவை ஏழாயிரமும், இவர்கள் கொடுக்க வேண்டிய கடன் ஏழாயிரமும் இருந்தன. வரவேண்டிய நிலுவை ஏழாயிரத்தில் ரூபாய் நான்காயிரம் பிநாங்கு, சிங்கப்பூரிலும், கொடுக்க வேண்டிய கடனில் திருச்சிராப்பள்ளியில் ஒரு சேட்டிடம் மூன்றாயிரமும் ஆக இருந்தன. எப்படிக் கடன் கட்டுவது? எப்படிச் சம்பாதிப்பது? என்று கி.ஆ.பெ.விக்கு ஒன்றும் புரியவில்லை. கதி கலங்கிப் டோனார். சிந்தித்தார் விசுவநாதம். ஒரு யோசனை தோன்றியது. தாம் கோலாலம்பூரில் உள்ள ஒரு நகரத்தார் கடைக்கு மூன்றாவது ஆளாக மூன்றாண்டுக்குச் சேர்ந்து ரூ 3000 சம்பளம் பேசி, வெளிநாட்டிற்கு வேலை செய்வது என்றும், மூன்றாவது ஆண்டு அந்த சேட்டுக்குப் பணம் கொடுத்து விடுவது என்றும் ஒரு முடிவுக்கு வந்தார். புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சேட்டுக் கடைக்குச் சென்று தம் முடிவைத் தெரிவித்தார் விசுவநாதம். சேட்டு யோசனையின் பேரில் உள்ளூர் வேலை சரிப்பட்டு வராது என்றும், தாம் வெளியூருக்கு ஓடி விட்டதாகக் கருதக் கூடாது என்றும், தம் சொந்த வீடு ரூ. 5000 பெறும் என்றும், அதற்குரிய பத்திரத்தை வைத்துக் கொள்ளுமாறும் கூறினார். தாம் தம் வணிகர்களிடம் கடனைத் தண்டப் பார்ப்பதாகவும் அப்படி வசூலானால் அங்கிருந்தபடியே தொகையை அனுப்பி வைப்பதாகவும், திரும்பியவுடன் பத்திரத்தைத் திரும்பப் 5. நல்வழி-32