பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர் திலகம் * 47 பெற்றுக் கொள்வதாகவும் கூறி பத்திரத்தை அவரிடம் ஒப்படைத்தார். சிறிது நேரம் சேட்டு அங்கிருந்த மேலாள், நடு ஆள், கடை ஆள் ஆகிய நால்வரும் கலந்து பேசினர். இறுதியாக சிரித்துக் கொண்டு பத்திரத்தை வாங்க மறுத்து, “உங்களிடம் நம்பிக்கையுண்டு. பணம் வசூலாகி விடும். வெற்றியுடன் திரும்புங்கள். இந்தியாவில் தொழில் செய்யலாம். நாங்களும் உதவுவோம்' என்று கூறி அனுப்பினார்கள். நாணயத்தின் அற்புதத்தைக் கண்டார். இந்தப் பயணத்தில் கோலாலம்பூரில் இரண்டு கடைகளில் ரூ. 725/-, ரூ. 470/-ம் தந்து இரண்டு மூட்டை புகையிலைக்கு ஆர்டர் தந்தனர். அங்கனமே சிங்கப்பூரிலும் இரண்டு கடைகளில் ரூ. 690/- ரூ. 430/வரலாயின. அதோடு சில ஆர்டர்களும் கிடைத்தன. இத்தொகைகள் உண்டியல் மூலம் சேட்டுக்கு அனுப்பு வைக்கப் பெற்றன. கோலாலம்பூர் ஒரு சீனன் கடையில் “உயர்ந்த சரக்கு - அதிக விலை” என்ற தத்துவத்தை விவரமாக அறிந்து கொண்டார். சிங்கப்பூரில் தங்கியிருந்தபோது ஒரு கடையில் மூன்றாம் தர புகையிலை விற்பதைக் கண்டார். அவரிடம் பேசி "உயர்ந்த சரக்கு - அதிக விலை தத்துவத்தை விளக்கி அதிக ஆர்டர்கள் பலரிடமிருந்து பெற்றார். பின்னர் இந்தியா திரும்பித் தம் தொழிலைத் தொடங்கினார். இவருடைய உயர்ந்த சரக்கு - அதிகவிலை தத்துவம்' பெரிய கோம்பையில் செயற்பட்ட விதம் அற்புதமானது. இவ்வூர் மணியக்காரர் ஒரு பெரிய நிலக்கிழார். இவரிடம் நல்ல புகையிலை இருப்பதாகக் கேள்வியுற்ற விசுவநாதம் சுமார் ஏழு கல் தொலைவு நடந்து சென்று அவரைச் சந்தித்தார். மலையடிவாரத்தில் ஆட்டுப் பண்ணையில் கிடைக்கும் ஆட்டுப் புளுக்கை போட்டு விளைய வைத்ததால் 6. இந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தம்பம்பட்டிக்கு மேற்கே கோல்லிமலை அடிவாரத்தில் உள்ளது.