பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. புகையிலைகள் நீண்டும், செழித்தும் கருநிறத்தையும், மினு மினுப்பையும், விராகன் புள்ளிகளையும் நல்ல குணத்தையும் பெற்றிருந்தது. நூறு கட்டுகளின் விலை, சொல்வது ரூ 95/என்றும் தருவது ரூ 90/- என்றும் முடிவாகக் கூறினார். புகையிலை அதிக ஈரமாக இருப்பதால் ஒரு வாரம் கழித்து வருவதாகவும் ஒவ்வொரு கட்டும் 40 பதம் எடையுள்ளதாகக் கூறி, பதினைந்தாம் நாள் 700 கட்டுகளையும் இலாபக் கட்டு 14ஐயும் ரூ 95 வீதம் தந்து சரக்கைப் பெற்றுக் கொண்டார். அன்று முதல் கோம்பையார் விசுவநாதத்தின் நிரந்தர வாடிக்கையாளரானார். வேறு எவர் வந்தாலும் சரக்கைக் காட்டுவதில்லை. பிதாங்கு வாணிகம் சற்று வேறுபட்டது. 'இந்தக்கப்பலில் அனுப்பிய இரண்டு மூட்டை புகையிலை வந்து சேர்ந்தது. இந்த ஆர்டருக்கு இரண்டு மூட்டை நல்ல சரக்காக அனுப்புங்கள்' என்று எழுதியிருந்தார் பிநாங்கு வணிகர். விசுவநாதம் 'அதைவிட நல்ல சரக்கு இல்லை. ஆதலால் அனுப்பவில்லை என்று எழுத, அவர் அலறி அடித்துக் கொண்டு, 'என்னை மன்னியுங்கள். கணக்கப் பிள்ளை புதியவர்: எல்லோருக்கும் எழுதுவதுபோல் எழுதி விட்டார். நான் அவரைக் கண்டித்து விட்டேன். இனி நானே கடிதம் எழுதுவேன். கப்பல் தோறும் தவறாமல் புகையிலையை அனுப்பிக் கொண்டிருங்கள்' என்று எழுதி விட்டார். இதில் விசவநாதத்தின் கொள்கை எவ்வளவு ஆழமாகச் செயற்பட்டது எனபதைக காணலாம. இங்ஙனம் விசுவநாதம் காலத்தில் உள்ளூர் வாணிகமும், இலங்கை, பர்மா, ஐக்கிய மலாய் நாடு, சிங்கப்பூர், ஜாவா, பிஜித் தீவு முதலிய பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு வாணிகமும் தந்தையார் காலத்தில் நடைபெற்றதை விட மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விகவநாதத்தின் புகழ்: விசுவநாதத்தின் சிறந்த வாணிகமுறை செயற்பாட்டினால் அவர்தம் புகழ் ஓங்கியது. (1) சென்னை மாநில தென்னிந்திய வர்த்தக சங்கத்தில் சாதாரண உறுப்பினர், நிர்வாக உறுப்பினர் ஆனார். இதில்