பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர் திலகம் * 49 அயராது உழைத்ததனால் சிறந்த தொழில் வல்லுநரானார். முன்னணியிலிருந்த வணிகர்களின் மதிப்புக்கும் உரியவ ரானார். (2) திருச்சியில் பீடி, மூக்குப்பொடி, புகையிலை, சுருட்டு வணிகர்களின் குறைகளைப் போக்கித் திருச்சி புகையிலை வணிகர்கள் சங்கம் என்ற ஒரு சங்கத்தை முதன் முதலாகத் தோற்றுவித்தார். அதனை உடனே பதிவு செய்து அதன் மூலம் போராடிப் பலருக்கு நன்மைகளைத் தேடித் தந்தார். (3) புகையிலை கொள்முதல், விற்பனை, இருப்பு முதலியவை பற்றியும், கொடுக்கல் வாங்கல், பயிர்த் தொழில், குடிக்கூலி, குடும்ப வரவு செலவு பற்றியும் இவர் கையாலேயே பல்லாண்டுகளாகக் குறிப்பும் பேரேடும் எழுதப் பெற்று வந்தன. மற்றவருக்கு ஆறு நாள் பிடிக்கும் விற்பனை வரி, வருமான வரிகளை அரை மணி நேரத்திலேயே தணிக்கை செய்து உரிய அதிகாரிகளும் மலைக்கும் வண்ணம் மிகத் தெளிவாக விளக்கிக் கூறி ஒப்புதல் பெற்று விடுவார். (4) இராமநாதபுரம் பக்கிரிமைதீன் ராவுத்தர் அவர்கட்கு எழுதிய பதினொரு வணிகக் கடிதங்களும் இன்றைக்கும் வாணிகத்துறை மாணவர்கட்கு அரிய கருவூலமாகத் திகழ்கின்றன. இன்றியமையாதவை: வணிகர்கட்கு இன்றியமையாதன வாக மூன்றினைக் குறிப்பிடுவார் அண்ணல் விசுவநாதம். அெை: (1) சிக்கனம்: வணிகர்கட்கு சிக்கனம் மிகவும் இன்றியமையாதது என்பதை வற்புறுத்துவார். சிக்கனம் 7. திரு.வி.க. புலவராக இருந்து தொழிலாளர்கள் உள்ளத்தைக் கவர்ந்து அவர்களின் தலைவரானன். அண்ணல் விசுவநாதம் தொழில் துறையினின்றும் புலவர் உலகத்திற்கு வந்து பெரும்புகழ் பெற்றன். விநோதமான ஒற்றுமை 8. திருக்கி விசுவநாதம்- பக் 20 9. து வியாபாரம்? எவர் வியாபார்: பக்.22-24 .ெடி