பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. (Frugality) வேறு. கருமித்தனம் (Miserlines) வேறு. சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று தவறாகக் கொள்வர். இரண்டிற்கும் உள்ள இடைவெளியைத் தெளிவாக சில எடுத்துக்காட்டுகளால் விளக்குவர். சுறுசுறுப்புக்கும் படபடப்புக்கும் உள்ள இடைவெளி, பொறுமைக்கும் அமைதிக்கும் உள்ள இடைவெளி, வீரத்திற்கும் போக்கிரித் தனத்திற்கும் உள்ள இடைவெளி, அன்பாய் இருப்பதற்கும் அடிமையாய் இருப்பதற்கும் உள்ள இடைவெளி சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் உண்டு. சிக்கனக் கொள்கைக்கும் ஒர் இலக்கணம் கூட உண்டு. அது: தேவைக்கு மேல் செலவு செய்வது பகட்டு (டம்பம்); அது தேவையில்லாதது. தேவையின் அளவு செலவிடுவதுதான் சிக்கனம். இது விரும்பத் தக்கது. தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம். இது வெறுக்கத்தக்கது, இவற்றை எடுத்துக்காட்டுகள் கொண்டும் விளக்குவார். ஐந்து மைல் தொலைவு செல்வதற்கு மகிழ்வுந்தை நாடக் கூடாது. முப்பது நாற்பது கையைக் கடிக்கும். அது ஊதாரித்தனம் - டம்பம்; அதிகச் செலவு. ரூ 1.25 செலவில் பேருந்தில் ஏறி இறங்கி அலுவலை முடித்துக் கொள்ளலாம். இதுதான் சிக்கனம். இதைத்தான் கொடுப்பானேன் என்று மூன்று காசுக்குப் பட்டாணிக் கடலை வாங்கி கொறித்துக் கொண்டு செல்கின்றானே அதுதான் கருமித்தனம். இஃது உடலுக்கும் சிரமம். இதனால் செலவிடும் காலத்தைப் பயனுள்ள வேறு அலுவலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வணிகருக்கு முன்னிருக்கும் தொலைபேசி அவன் வருவாயைப் பாழாக்கும் கருவியாக அமையக் கூடாது. தேவையான பொழுது மட்டிலும் பயன்படுத்தித் தொலைபேசிச் செலவைக் குறைத்தாகவேண்டும். குறைக்கும் அளவுக்கு நல்லது. நாளைக்குத் தொலைபேசியில் அனுப்புகிற செய்தியை இன்றைக்கு அஞ்சலில் தெரிவித்தால் ஒரு ரூபாய் செலவோடு போய்விடும். பேசுகிற பேச்சு சுருக்கமாகவும்