பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்திலகம் * 51 தெளிவாகவும் இருந்தால் தொலைபேசிச் செலவைக் குறைக்க வழி வகுக்கும். (2) சேமிப்பு: வங்கியில் சேமிப்புக் கணக்கு திறந்து அதில் சிறுகச் சிறுகப் போட்டு வைக்கலாம். கணிசமாகத் தொகை பெருகியதும் அதனைப் பங்குச் சந்தையில் சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம். தக்க தருணத்தில் விலை ஏறும் போது விற்கலாம். விற்ற பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு நிலம் வாங்கலாம்; அதன் விலை ஏறிக் கொண்டும் வருமானத்தைத் தந்து கொண்டும் இருக்கும். ஒருவருக்குச் சேமிப்பு எண்ணம் வந்துவிட்டால் அது தானாக வேலை செய்யத் தொடங்கும். புதிய புதிய எண்ணங்கள் தோன்றும். நான் காரைக்குடியில் வாழ்ந்தபோது (1950-66) ஜோதிமணி என்ற ஒரு நாடார் சிறுவன் - 10, 12 வயதுள்ளவன். பழைய செய்தித்தாள் வாணிகம். விலை குறைவான காலம். மிதி வண்டியில் சதா சுற்றிக் கொண்டு செய்தித் தாள் வாங்குவான்; பழைய தாளுக்குக் காசும் தருவான்; பேரீச்சம்பழமும் தருவான். அவனதுசுறுசுறுப்பான பண்பு என் கவனத்தை ஈர்த்தது. அடிக்கடிப் பேச்சு கொடுப்பேன். நாளொன்றுக்குப் பத்து ரூபாய் கிடைக்கும் என்றும் அதில் நான்கில் ஒரு பகுதி (ரூ. 2.50) சேமிப்பதாகவும் கூறுவான். 1966 முதல் திருப்பதி சென்று விட்டேன். 1970இல் காரைக்குடி வர நேர்ந்தபோது ஒரு சிறு பெட்டிக்கடை முதலாளி. அத்தொழிலில் கிடைக்கும் வருமானத்திலும் சேமித்துக் கொண்டு பெட்டிக்கடை பெரிய கடையாயிற்று. மாணவர்கட்கு வேண்டிய பொருள்களனைத்தையும் விற்கத் தொடங்கினார். கடைக்கு முன் சதா மாணவர்கள் கூட்டம். உதவியாள் கூட இல்லாமல் தொழில் நடைபெறுகின்றது. கழுத்தில் தங்கச்சங்கிலி; அரைக் கை சட்டை அணி செய்யும் திருமேனி. 1965இல் ஒரு தடவையும் அதற்குப் பின்னர் பல 10. நாடார் சமூகத்தி னருக்கு இது இயல்பான பண்பு. ஆண்களும் பெண்களும் இப்பண்புடையவர்கள்.