பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. தடவைகளிலும் அவரைப் பார்த்து மகிழ்வேன். அவருடைய கடை கொப்புடையம்மன் சந்நிதியருகில் உள்ளது. நான் பார்க்கும் போதெல்லாம், 'தம்பி ஜோதிமணி, நீ மிகவும் புத்திசாலி, உன்னுடைய புத்திசாலித்தனத்தால், உன் தொழில் வளர்கின்றது." என்பேன். அவர், 'ஐயா, என்னால் ஒன்றும் இல்லை. எல்லாம் அந்த அம்பாள் அருள்' என்று அம்பாள் சந்நிதி பக்கம் கை நீட்டிக் கூறுவார். "பெருக்கத்து வேண்டும் பணிதல்' (963) என்ற வாய்மொழியின்பொருளை அவர்பால் கண்டேன். இவர்தம் உயர்வு சேமிப்பால் வந்தது. (3) பாதுகாப்பு: ஒரு வணிகர் சிக்கனத்தையும் சேமிப்பையும் கடைப்பிடித்தால் மட்டும் போதாது. சேமித்த பணத்தைப் பாதுகாக்கவும் வழி காணல் வேண்டும். ஒருவருக்குப் பொருள் வந்து சேர்வது திடீரென்று வந்து விடாது. சிறுகச் சிறுகச் சேர்ந்தபின் பெருஞ் செல்வமாக வந்து காட்சியளிக்கும். ஆனால் போகும்போது சிறுகச் சிறுகப் போகாது; ஒரேயடியாகத் திடீரென்று தொலைந்து போய் விடும். இதனைத் திருவள்ளுவர், கூத்தாட்டு அவைகுழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந்து அற்று (332) என்று கூறுவர். ஒரு நாடக அரங்கிற்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து காட்சி தொடங்கும்வரை பெருங் கூட்டமாகக் காட்சியளிக்கும். காட்சி முடிந்ததும் அக்கூட்டம் ஒரேயடியாகக் கலைந்து போகும். இது போன்றதுதான் ஒருவருக்குச் செல்வம் போவதும் வருவதுமாக அமையும். இங்ஙனம் ஒருவருக்குச் செல்வம் மெதுவாக வருவதை குறளின் முதலடியில் நீண்ட சீர்களால் குறிக்கின்றார் ஆசிரியர். செல்வம் திடீரென்று போவதை இரண்டாம் அடியில் சிறு சீர்களால் குறிக்கின்றார். பல ஆண்டுகள் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கத் தெரியாமல் இழந்து விட்டவர் பலர். இவர்களில் 11. இந்த உரை ரசிகமணி டி.கே.சி. சென்னது.