பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர் திலகம் * 53 பெரும்பாலோர் உலகம் இன்னதென தெரியாதவர். உலகம் இன்னதென்று நன்கறிந்த தரகர்களின் வஞ்சகச் சொற்களில் - தந்திரச் சொற்களில் - ஏமாந்து விடுவது இயல்பேயாகும். அண்மையில் அதிக வட்டி தருவதாக (30- 40 சதவிகிதம்) விளம்பரம் செய்த நிறுவனங்களில் பணத்தைப் போட்டு ஏமாந்த கூட்டங்களை நாம் கண்டோம். இவர்கள் யாவரும் ஆக்கம் கருதி முதல் இழந்தவர்கள் (குறள்-483) சுமார் முப்பது நிறுவனங்கள் இவ்வாறு செய்து வழக்கில் மாட்டிக் கொண்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம். வணிகர்களாகவோ தொழிலதிபர்களாகவோ இருப்பவர்கள் தம்மிடமுள்ள தொகை முழுவதையும் தொழிலில் போட்டு விடாமல் அத்தொகையைப் பத்துப் பங்குகளாகப் பிரித்து ஐந்து பங்குகளைத் தொழிலில் முடக்கலாம். இரண்டு பங்குகளைவிடுகளிலும், ஒருபங்கினை வங்கியிலும், ஒரு பங்கினை ஆலைப் பங்கிலும், அரைப் பங்கினைத் தங்கத்திலும், அரைப் பங்கினை ரொக்கமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று யோசனை கூறுவார் அண்ணல் விசுவநாதம். - நம்மிடமுள்ள பங்குகள் அனைத்தையும் ஒரேதுறையில் போட்டு விடாமல் வங்கிப் பங்கு, நூல் பங்கு, துணிப் பங்கு, தோட்டப் பங்கு, இயந்திரப் பங்கு ஆகிய பல துறைப் பங்குகளாகப் பார்த்துப் போடுவது சிறப்பாகும் என்று மேலும் விளக்குவர். இம்முறை ஏமாற்றுபவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுமில்லாமல் அடிக்கடி சட்டத்தை மாற்றும் அரசாங்கத்திடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மேலும், இதனால் ஒரு நன்மையும் உண்டு. ஒரு துறையில் இழப்பு ஏற்பட்டாலும் மற்றொரு துறை நம்மை உயர்த்திக் கொடுக்கும். எந்த முறையில் பார்த்தாலும் இதை விடச் சிறந்த பாதுகாப்புக் கலை இப்போது இல்லை. இங்ங்ணம் அண்ணல் கூறும் அறிவுரை எல்லோராலும் பின்பற்றக் கூடியது.