பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. அறச் செயல்கள்: பாதுகாக்கும் செல்வத்தை அறச் செயல்களில் ஈடுபடுத்தியும் ஆக வேண்டும். செல்வத்தின் பயனே ஈதல் என்பது சான்றோர் மொழி. இன்பங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தது. ஈத்துவக்கும் இன்பம்." அது தனக்கே உரிய செல்வத்தை இல்லாத ஏழை மக்களுக்கு வழங்கி, பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ச்சியடைவ தைக் கண்டு மகிழ்ச்சியடையும் இன்பம். வணிகர்கள் வாணிகம் செய்யத் தொடங்கும் முதல் நாளிலேயே சாமி வரவு' என்றும், மகமை வரவு' என்றும் ரூ 101, அல்லது ரூ 51/ அல்லது ரூ 11/ வரவு வைத்துதான் தமிழகத்தில் தொழிலைத் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகின்றது. அந்த மகமைக் கணக்கில் பிறரிடம் வாங்குகின்ற மகமை மட்டும் அல்லாமல் தன்னுடைய இலாபத்திலும் ஒரு பங்கை மகமைக் கணக்கில் வரவு வைத்துப் பல அறச் செயல்களுக்கு வழங்கியாக வேண்டும். இம்முறை வணிகனை மட்டும் அல்ல, அவன் வாணிகத்தையும் உயர்த்தி வைக்கும்." இவண் கூறப்பெற்ற கருத்துகள் யாவும் அண்ணல் விசுவநாதத்தினுடையவை. எல்லோருக்கும் பயன்படுபவை. இவற்றைத் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு - குறிப்பாக வணிகப் பெருமக்களுக்கு வழங்கிய கி.ஆ.பெ.வி. அவர்களை வணிகர் திலகம் என்று கூறுவது எல்லா வகையிலும் பொருந்தும், இல்லையா? 12. இதனை அடியேன் வள்ளல் அழகப்பரிடம் கண்டேன்; மகிழ்ந்தேன். 13. தாடர் பேருமக்களின் - வணிகர்களின் - மகமைக் கணக்கில் வரும் வருமானத்தால் பல உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறுவனவாகச் சொல்லப் பெறுகின்றது.