பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் தந்தது உன் தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றது.ஒன்று என்பால்? சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே! எந்தையே! ஈசா உடலிடங்கொண்டாய் யான்.இதற்கு இலனொர்கைம் ເorຮົp" என்ற திருவாசகப் பாடலுடன் இந்த இயல் தொடங்குகின்றது. சிறந்த புகழ் பெற்ற சைவக் குடும்பத்தில் பிறந்தவர். இல்லத்தின் பெயர் மணிவாசகத் தமிழகம் என்பது. இதனால் மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர் என்பது தெளிவாகின்றது. இங்குக் குறிப்பிட்ட மணிவாசகரின் மணியான இப்பாடலில் மணிவாசகப் பெருமான் இறைவனுடன் ஒரு வாணிகம் செய்கின்றார். வாணிகம் சாதாரணமான பண்டமாற்றுதான். இதிலும் மணிவாசகருக்குக் கிடைத்த இலாபம் ஆனந்தம் என்று பெருமானே குறிப்பிடுகின்றார். எம்பெருமானை நோக்கி 'யாது நீ பெற்றாய்?" என்ற வினாவை எழுப்புகின்றார்? பாடலில் எம் பெருமானின் மறுமொழி இல்லாததால் அவர் 1.தி குல கோயில் திருப்பதிகம்- 10