பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் & 59 தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லல்அறுத்து ஆனந்தம் ஆக்கியதே-எல்லை மருவாநெறியளிக்கும் வாதஆர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன். என்ற பாடலைக் குறிப்பிட்டு திருவாசகத்தின் சிறப்பினை விளக்கி இருக்க வேண்டும். திருவாசகத்தைக் குறள், மறைமுடிவு (உபநிடதம்), மூவர் தமிழ் (தேவாரம்), முனிமொழி (திருமூலர் திருமந்திரம்) இவற்றுடன் ஒப்பிட்டு இவை யாவும் ஒருவாசகமே என்று ஒளவைப் பாட்டியின் வாக்காக வரும், தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர்தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம்என்று உணர் என்ற பாடலை எந்தச் சொற்பொழிவிலும் மேற்கோளாக வாவது காட்டியிருக்க வேண்டும். திருவாசகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். திருவாசகம் பற்றிய பேச்சுகளில், மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார்கழற்குஎன் கைதான் தலைவைத்து கண்ணி ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான்.தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே’ 5. நல்வழி 40 6. திருவாசகம்- திருச்சதகம்- 1