பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. வி. நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரம் சித்தி விநாயகர் சபை ஆண்டு விழாவில் நிகழ்த்திய முதல் பேச்சுபற்றிப் பிறிதோர் இடத்தில் குறிப்பிடப் பெற்றது. அந்நாள் தொட்டு அவரது நாவன்மையைத்தமிழ்நாடு முழுவதும் அறிய வாய்ப்பு உண்டாயிற்று. துத்துக்குடி சைவ சித்தாந்த சபை' முதலிய பல சைவ சபைகளிலும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார் அண்ணல் விசுவநாதம். இவர்தம் பேச்சை சைவப் பெரு மக்களும் தமிழறிஞர்களும் மிகவும் பாராட்டி மகிழ்ந்தனர். சைவக் கூட்டங்களின் தொடர்பு மிக மிக சைவக் கூட்டங்களில் பேசும் வாய்ப்புகளும் பெருகின. இவர்தம் சைவ சமயப் பேருரைகள் சைவப் பெருமக்களால் மிகவும் பாராட்டப் பெற்றன. இவ்வாறு இவர் சைவப் பேருரைகளால் புகழோங்கி யிருந்த காலத்தில், பஞ்சாட்சரபுரம் மறைத்திருவாளர் வாலயானந்த சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்று சைவப் பெரியார்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் அண்ணல். இதன் பிறகு அண்ணல் பல்லாவரம் மறைமலை அடிகளாரைச் சைவத்திற்கும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்களைத் தமிழுக்கும் பேராசிரியர்களாகக் கொண்டு பெரு மதிப்புப் பெற்று வந்தார். இவருடைய சைவச் சொற்பொழிவுகளைப் பற்றி விவரமான குறிப்புகள் எவையும் இவர்தம் நூல்களில் காணப் பெறவில்லை. வேறு சிலரும் அத்தகைய குறிப்புகளைக் காட்டவில்லை. திருவாசகம்: ஆதலால் அவர்தம் சொற்பொழிவுகளில் எத்தகைய பாடல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனையில் கண்டு சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன். இல்லத்திற்கே 'மணிவாசகர் தமிழ் அகம்' என்று திருநாமம் சூட்டியிருப்பதனால் அவருக்குத் திருவாசகத்தில் அதிக ஈடுபாடு மிக்கிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். எங்காவது ஒரு பேச்சிலாவது, 4. இந்த சபை ஆண்டுவிழா மலருக்கு தான் கட்டுரை வழங்கியுள்ளேன்.