பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் & 57 படியைச் சொன்னார். உண்டவனுக்குத் தண்ணிர் வேண்டுமல்லவா? அதை இப்பாசுரத்தில் சொல்லுகின்றார்'தான் என்னை முற்றப் பருகினான்’ என்று. இவருடைய 'உண்ணும் சோறு பருகுநீர் அவன்; அவனுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இவர் என்பதை அறிந்து மகிழ்கின்றோம். மேலும் "ஈசுவர இலாபம் சேதநனுக்கா? சேதந இலாபம் ஈசுவரனுக்கா?' என்ற வினா அடியவர்களிடம் எழுவது உண்டு. சேதந இலாபம் ஈசுவரனுக்கே என்பது முடிந்த முடிபாகக் கொள்வர். “இதனாலன்றோ எம்பெருமான் 108 திவ்விய தேசங்களில் மகாத்மா ஒருவனை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றான். என்பதாக வைணவத்தில் ஒரு கொள்கை உண்டு. இத்துடன் இது நிற்க. சைவப்பற்று: அண்ணல் விசுவநாதத்தின் குடும்பம் சைவ சமயத்தைச்சார்ந்தது. ஆதலால் அண்ணல் சைவ சமயத்தின்மீது ஈடுபாடு கொண்டது வியப்பொன்றும் இல்லை. மேலும் அவரது தமிழ் நூலாராய்ச்சி சைவப் பெரியோர்களின் கூட்டுறவை நாடிச் செல்ல வாய்ப்பினை நல்கியது. இதனால் அவருக்கு திருசிரபுரம் சைவ சித்தாந்த சபையின் தொடர்பு இருந்து வந்தது. சில காலம் அங்கு அச்சபையின் துணைச் செயலாளராக இருந்து பணி புரிந்துள்ளார். அண்ணலின் சைவப் பற்றும் தமிழ்க் காதலும் அவர்தம் இளமைப் பருவத்தில் ஒன்றையொன்று தழுவி வளர்ந்தமையால் தமிழ்நாடு முழுவதும் அவரது புகழ் பரவத் தொடங்கியது. இதனால் தமிழ் நாடெங்கும் அமைந்துள்ளதமிழ்ச்சங்கங்களும் சைவ சித்தாந்த சபைகளும் அண்ணலை வருந்தி அழைத்து சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்தன. நான் காரைக்குடியில் பணியாற்றிய காலத்தில் (1950-60) செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள பல உயர் நிலைப் பள்ளி ஆண்டு விழாக்களில் அண்ணலும் அடியேனும் ஒரே மேடையில் சந்தித்ததுண்டு. 3. திருச்சி மலைக்கோட்டைத் தெருவில் உள்ளது. நான் திருச்சியில் புனித சூசையப்பர் கல்லூரியில் படித்தபொழுது (1934-38) அங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன்.அப்போது அண்ணலைச் சில சமயம் பார்த்ததுண்டு.