பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் & 81 தேன்கலந்து பால்கலந்து செழுங்கணிதீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவப்பால் இனிப்பதுவே." என்ற வள்ளல் இராமலிங்க அடிகளாரின் திருப்பாடலையும் அவையினருக்கு எடுத்துக்காட்டி அவர்களை பக்திக் கடலில் மிதக்கச் செய்திருத்தல் வேண்டும். 'சொல்லின் செல்வர்' இதனைச்செய்யாமலா இருந்திருப்பார்? சில சமயங்களில் இவர்தம் பேச்சு உச்ச நிலையில் களை தட்டியிருக்கும் போது, தனியனேன்பெரும்பிறவி பெளவத்தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன்றின்றிக் கனியைநேர்துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு இனியென்னே உய்யுமாறு என்றுஎன்று எண்ணி அஞ்செழுத்தின்புணைபிடித்துக் கிடக்கின்றேனே முனைவனே முதல்அந்தம் இல்லாமல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே." என்ற பாடலை அவையின் முன் வைத்து அவர்களை பக்திக் கொடுமுடிக்கு இட்டுச் சென்றிருத்தல் கூடும். நேர்மைக்கும் நீதிக்கும் ஒழுக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டநம் அண்ணல் பக்திக் காதலை நுவலும் - அதே சமயத்தில் தத்துவக் கருத்தையும் உள்ளுறையாகக் கொண்டும் -திகழ்கின்ற திருக் கோவையாரையும் மறந்திருக்க முடியாது. அதன் பெருமை யைப் புகலும், ஆரணம் காண்என்பர் அந்தனர்; யோகியர் ஆகமத்தின் 9. திருவருட்ப ஆளுடைய அடிகள் அருள்மாலை-7 10. திருவ - திருச்சதகம்-21