பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. காரணம் காண்என்பர்; காமுகர் காமநன்னூல் என்பர்; ஓரணம் கான்என்பர்; எண்ணர் . எழுத்தென்பர்; இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. f : என்ற பாடலைப் பல கூட்டங்களில் எடுத்துக்காட்டிக் கேட்போரை மகிழ்வித்திருக்கலாம். காமுகன் காம நன்னூல் என்பர் என்ற அடிகளை எடுத்துக்காட்டி அது பக்திக் காதலைக் குறிப்பதாகவும், மேலும் அது சீவான்மா - பரமான்மா தொடர்பைத் தெரிவிப்பதாகவும் விளக்கம் தந்து கேட்போரின் ஐயத்தை அகற்றியிருப்பர். திருக்கோவையாரில் இன்னொரு நயமான பாடல்: சிறைவான்புனல்தில்லைசிற்றம்பலத்தும் என்சிந்தை உள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ? இறைவா! தடவரைத்தோட்கு என்கொலாம்

  • - #2

புகுந்து எய்தியதே. என்பது ஒரு பாடல். 'பாங்கனை வினாதல்’ என்ற துறையில் அமைந்தது. தமிழில் அகத்துறையில் அமைந்த பாடல்களின் சிறப்பையும் (இயற்றமிழ்), ஏழிசையில் அமைந்த பாடல்களின் (இசைத்தமிழ்) சிறப்பையும் ஒருங்கே சிறப்பிப்பதாக அமைந்தது இப்பாடல். களவில் சந்தித்த தலைவன் அவளையே நினைந்து நைகின்றான். பார்க்கும் வாய்ப்பில்லாமல், உண்ணும் 11. திருக்கோவை- நூற்சிறப்பு 12. கேது - 20